விடியல்


நீங்கள் எழுதும் சொற்களிலிருந்து
நீங்கள் பேசும் பேச்சுகளிலிருந்து
நீங்கள் வரையும் ஓவியத்திலிருந்து
நீங்கள் செதுக்கும் சிற்பத்திலிருந்து
நீங்கள் இசைக்கும் இசையிலிருந்து
என்றில்லை
உங்களிடமிருந்து பெற்ற பேனாவிலிருந்து
எழுதப்படும்
வழிப்போக்கனின் சிறுகுறிப்புகளிலிருந்தும் கூட.
தயவுசெய்து
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றுதான்
எந்தகாரணம் கொண்டும் மூடிகளை 
உங்களுடன் நிலையிருத்தி கொள்ளாதீர்கள்

நன்றி :  ஜூலை 2010,  உயிர் எழுத்து 

9 comments:

செல்வராஜ் ஜெகதீசன் said...

அருமை வேல்கண்ணன்.

கமலேஷ் said...

உண்மைதான் நண்பரே...ஒத்த வரில கவிதை குடை போல விரிஞ்சி இருக்கு...

ஆறுமுகம் முருகேசன் said...

ரொம்ப நல்லா இருக்கு நண்பா :)

பா.ராஜாராம் said...

மிக அருமை வேல்கண்ணா!!

கனவுகளின் காதலன் said...

மிகவும் அருமையான வரிகள் நண்பரே.

velkannan said...

அன்பு செல்வராஜ் ஜெகதிசன் ,
நண்பர் கமலேஷ்
நண்பர் ஆறுமுகம் முருகேசன்
அண்ணன் பா.ரா
நண்பர் கனவுகளின் காதலன் மற்றும்
அனைத்து நண்பர்களுக்கும் நன்றி நன்றி நன்றி

ஹேமா said...

சரியான உண்மை கண்ணன் !

உயிரோடை said...

வாழ்த்துகள்

velkannan said...

ஹேமா -விற்கு
உயிரோடை -விற்கு
நன்றியும் அன்பும்