மன வட்டம்



முதலுக்கும் முடிவிற்கும்
ஊசலாடிக்கொண்டியிருக்கும் 
சிதறிய எண்ணத்தின்
தவிப்புகளைக் ஆதாரமின்றி
சுழலவிடும் வட்டப்பந்து

உனது எனது என
பிரித்தறிய முடியாதவைகளை
யாராலும்
அடையாளம் காணமுடியவில்லை
விடுபடுதலின் விதிகளை
மனனம்
செய்தும் பலனில்லை
 
வனத்தின் ஏதேனும் ஒரு
முனையிலிருந்து ஊற்றெடுக்கும்
நீருற்று என்னை நோக்கி
          ....வரும்
          ...வருகிறது
எனவும் நினைத்துகொள்ளும் மனம்

நன்றிஉயிர் எழுத்து  ஜூலை 2010, தடாகம்

12 comments:

Ashok D said...

மன ஓட்டம் அழகு :)

Unknown said...

நல்லாயிருக்கு நண்பா :)

நிலாமகள் said...

//வனத்தின் ஏதேனும் ஒரு
முனையிலிருந்து ஊற்றெடுக்கும்
நீருற்று என்னை நோக்கி
....வரும்
...வருகிறது
எனவும் நினைத்துகொள்ளும் மனம்//நம்பிக்கையின் பிடிமானத்தில் தானே வாழ்தல் நகர்கிறது...! வாழ்த்துகள் சகோதரரே...!

கனவுகளின் காதலன் said...

சிறப்பான ஆக்கம் நண்பரே.

santhanakrishnan said...

உயிரெழுத்தில் படித்ததை விட
படத்துடன் படிக்கும் போது
மிகவும் பாந்தமாய் இருக்கிறது.

ஹேமா said...

வாசித்து முடிஞ்ச பிறகும் மனசில ஓடிக்கொண்டேயிருக்கு வரிகள்.

உயிரோடை said...

அருமை. வாழ்த்துகள் வேல்கண்ணன்

கமலேஷ் said...

கவிதை மிகவும் நன்றாக உள்ளது நண்பரே...

rvelkannan said...

நண்பர் அசோக்கின் வருகைக்கும் கருத்திற்கும் மிகுந்த நன்றியும் அன்பும்

நண்பர் ஆறுமுகம் முருகேசனுக்கு மிகுந்த நன்றியும் அன்பும்

நிலா மகளின் வருகைக்கும் கருத்திற்கும் மிகுந்த நன்றியும் அன்பும்

நண்பர் கனவுகளின் காதலனுக்கு எனது அன்பு

rvelkannan said...

மிகுந்த நன்றியும் அன்பும் நண்பர் சந்தன கிருஷ்ணனுக்கு

தோழி ஹேமா வாங்க நலமா எனது
நன்றியும் அன்பும்

உயிரோடை க்கு நன்றியும் அன்பும்

மிகுந்த நன்றியும் அன்பும் நண்பர் கமலேஷ்க்கு

ஹ ர ணி said...

அவரவர் மனவட்டத்திற்குள் ஆயிரமாயிரம் எண்ணங்கள் இழைந்தும் குழைந்தும் இதமாயும் பதமாயும்...படைப்பாளி அவற்றைப் படைப்பில் வெளிப்படுத்தி நிற்கிறான். உங்களின் மனவட்டம் மனதினை மென் சிறகுகளால் வருடுகிறது. வாழ்த்துக்கள் கண்ணன்.

rvelkannan said...

மிகுந்த நன்றியும் அன்பும் ஹரிணி அவர்களுக்கு