ஒரு விண்ணப்பம்

  
தெய்வமொன்று நேரில் வந்து
'வரமொன்று தருகிறேன்' என்றது.
நம்புங்கள், தமிழில் தான் பேசியது.
வியப்பான வினாவுடன் பார்த்தேன்.

"புரிகிறது, இருப்பதே என்னிடம் ஒன்று தான்

ஒன்றுக்கு மேல் கேட்டு விட்டால்?"
சரிதான். கொடுத்தே நொந்து போயிருக்கும் போல.

"வரம் பலிக்க வேண்டுமென்றால்

எனக்கொன்று செய்யவேண்டும் ..."
அது தானே பார்த்தேன்....

"நான் நான்கு கோப்பையை தருகிறேன்

ஒன்றில் தூயபாலை நிரப்பவேண்டும்"
நிரப்பினேன்.

"அடுத்ததில் தூயமது....."

இடைமறித்தேன்; நிரப்பினேன்.

உற்று என்னை கவனித்தபடி

"மூன்றாவதில் மனித ரத்தம்..."
நொடியில் நிரப்பினேன்.

"நான் மனித ரத்தம் கேட்பது

உனக்கு அதிர்ச்சியை தரவில்லையா ... ?"
'இல்லை. பழக்கப்பட்டுவிட்டது.
புத்தனின் பெயராலேயே இங்கு ரத்தம் குடிக்கப்பட்டது.
பிறகென்ன ...
நொடியில் நிரப்பிய காரணமும் அதுதான்'

தெய்வம் மெளனமானது.

நான்காம் கோப்பையை காட்டி
"தூய மழைநீர் ..." என்றபடியே மறைந்தது.
தூக்கி வாரிப்போட்டது எனக்கு.

பித்தேறி வெற்று கோப்பையுடன் அலைகிறேன்

உங்களிடம் இருந்தால் தாருங்கள் ...
தருபவர்களே வரத்தையும் எடுத்துக்கொள்ளலாம்
தருவீர்களா ... ?


நன்றி : வார்ப்பு

15 comments:

உயிரோடை said...

வேறு த‌ள‌த்தில் இருக்கு க‌விதை.

"உழவன்" "Uzhavan" said...

இதுபோன்ற கவிதைகள்தான் பெரும்பாலும் என் மனதை ஆட்டுவிக்கின்றன. இதே கருத்தைக்கொண்ட கவிதைக்காக வார்த்தைகளை நீண்ட நாட்களாகத் தேடியலைந்த இவ்வேளையில், நீங்கள் எனக்குப் பருகக் கொடுத்துவிட்டீர்கள். அருமை நண்பா :-)

hemikrish said...

//உங்களிடம் இருந்தால் தாருங்கள் ...
தருபவர்களே வரத்தையும் எடுத்துக்கொள்ளலாம்
தருவீர்களா ... ?//

ஹா ஹா..நன்றாக உள்ளது கவிதை...
உங்க ஊர்ல நல்லவங்களே இல்லை போல..அதான் மழை வரல..:-)....


நீங்க சொல்றதுல உண்மை இருக்கத்தான் செய்யுது ......மரங்கள் நடனும்னு government சொல்லும்..அப்புறம் road அகலப்படுத்தனும்னு அவங்களே வெட்டுவாங்க....:-(....

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

அட்டகாசம்.

கல்யாணி சுரேஷ் said...

அருமையான கவிதை. ரொம்ப நல்லா இருக்கு கண்ணன்.

santhanakrishnan said...

தூய மழை நீர் அருகி விட்டது.
மனித ரத்தம் மலிந்து விட்டது.
தேசத்தின் அவலத்தை
சொன்ன உங்கள் கவிதை வரிகள்
சாட்டையடிகள்.

Ashok D said...

நல்லதோர் பொதுநோக்கு கேள்வி...

நல்ல தண்ணீர் கிடைக்காத தேசமிது

Thenammai Lakshmanan said...

பிறகென்ன ...
நொடியில் நிரப்பிய காரணமும் அதுதான்' //

அருமை வேல்கண்ணன்.. தண்ணீர் இன்னும் அடர்த்தியான திரவமாகி விட்டது

rvelkannan said...

நன்றி உயிரோடை
தளம் நம் கையில் இல்லை தானே

நன்றி உழவன்.
நீங்களும் எழுதலாமே இதன் கருவை...

நன்றி ஹேமிகிருஷ்
//உங்க ஊர்ல நல்லவங்களே இல்லை போல..அதான் மழை வரல//
அட.. உங்களின் ஊரில் நிறையா.. நல்லவங்க இருக்காங்களா ... நான் கேட்டது 'தூய' மழைநீர் ...

நன்றி நண்பர் கனவுகளின் காதலன்.

rvelkannan said...

நன்றி தோழி கல்யாணி சுரேஷ்

நன்றி நண்பர் சந்தானகிருஷ்ணன்
முழு புரிதலுக்கும் தொடர் வாசித்தலுக்கும்

நன்றி நண்பர் D.R. அசோக்

நன்றி தேனம்மை ...
//தண்ணீர் இன்னும் அடர்த்தியான திரவமாகி விட்டது//
உண்மைதான்.

Sugirtha said...

சிந்திக்க வைக்கும் கவிதை...

velkannan said...

நன்றி சுகிர்தா

vasan said...

நாக‌ரீக‌ம் தோன்றிய‌து, நதிக் க‌ரைக‌ளில்,
ந‌கர‌ம் தோன்றிய‌து, நதியின் ம‌ண்ணால்,
நர‌க‌ம் தோன்றுகிற‌து, நதியின் ம‌றைவால்.
வானம் பொய்க‌, வ‌ன‌ம் அழித்தோம்.
க‌ண்ணை விற்று, சித்திர‌ம் வாங்குத‌லாய்,
த‌ண்ணீர் விற்று, கோக் அருந்துகிறோம்.

rvelkannan said...

முகத்தில் அறைகிறது நான் சொன்ன வந்த உண்மை உங்களின் பின்னூட்டத்தில். தாமதமாக வருகை தந்தாலும் உங்களின் வரவும் கருத்தும் மிகுந்த மகிழ்வை தருகிறது வாசன். நன்றி

arasan said...

கலக்கலான ஒன்று..

வாழ்த்துக்கள் சார்