டிசம்பர் மாத கேணி சந்திப்பில் வண்ணதாசன்


கேணி சந்திப்பு 
டிசம்பர் 12 ஞாயிறு மாலை 4 மணி. பேசுபவர்: எழுத்தாளர் வண்ணதாசன்
இடம்: 39 அழகிரிசாமி சாலை கலைஞர் கருணாநிதி நகர்.
சென்னை 78.அவரின் ஒரு கவிதை


இந்த கவிதையை மிகச்சரியான சமயத்தில் கொடுத்து உதவிய  கவிஞர் செல்வராஜ் ஜெகதிசனுக்கு நன்றி:  


'பெய்தலும் ஓய்தலும்' சிறுகதை தொகுப்பு முன்னுரையிலிருந்து 
ஒரு நசுக்கப்பட்ட புழு, ஒரு குதிரையின் புலம்பல், சாய்ந்த வனம், எரிக்கப்பட்ட நூலகம், புதைந்துபோன இசைக்கருவிகள், வன்புணரப்பட்ட யோனிகள், கலவரங்களில் வேட்டையாடப்பட்டவர், குளிர்பான பாட்டில்களுக்குள்
அடைக்கப்படுகிற நதிகள், நம்முடைய தோள் அளவுகள் இடுப்பு அளவுகள் அற்றுத்தைக்கப்படுகிற உடைகள், கடவுச் சீட்டுக்களுக்காகச் சுருக்கப்படுகிற பெயர்களில் தொலைந்து போகிற முன்னோர், காகிதத்தட்டுக்களில் பரிமாறப்படுகிற சக்கை உணவுகள், யாரோ முன் தீர்மானிக்கிற நமது அன்றாடத்தின் நிகழ்ச்சி நிரல்கள், சுவடற்று அழிக்கப்படுகிற  பண்பாட்டு அடையாளங்கள், கழுகுகள் வட்டமிடத் துவங்கிவிட்ட கழுவேற்றப்பட்டு வெகு நாட்களான மொழி... இப்படியாகவே ஆன வழியில், தென்படுகிற கல் மண்டபங்களும் சில வற்றாத நதிகளும் தற்காலிக ஆசுவாசம் அளிக்கின்றன.

நதியும் மணலற்றுப் போய்க் கொண்டிருக்கிறது. இதுவரை அது தன் நீர்மையை மணலால் உச்சரித்துக் கொண்டுவந்தது. அள்ளப்பட்ட மணல், கலக்கிற சாயக் கழிவுகளில் மீன்கள் முச்சுத் திணறுகின்றன. நீந்துகிற மீன்களையல்ல, அதிகாலையில் இறந்து ஒதுங்கியிருக்கிற மீன்களைப் பற்றியே இந்த தினத்து கவிதை இருக்க முடியும். 


நன்றி : சந்தியா பதிப்பகம்.


இதனை பகிர்வதில் பெருமிதமும் மகிழ்வும் கொள்கிறேன். 


நன்றி ! நன்றி ! நன்றி !

10 comments:

கனவுகளின் காதலன் said...

சிறப்பான பகிர்விற்கு நன்றி நண்பரே.

butterfly Surya said...

தகவலுக்கும் பகிர்தலுக்கும் நன்றி கண்ணன். சந்திப்போம்.

இதை வாசித்தீர்களா..?

http://azhiyasudargal.blogspot.com/2010/03/blog-post_29.html

ஜீ... said...

நல்ல கவிதை! :-)

செல்வராஜ் ஜெகதீசன் said...

பகிர்விற்கு நன்றி வேல் கண்ணன். போய் வந்து கல்யாண்ஜியின் முழுப் பேச்சையும் ஒரு பதிவாய்ப் போடுங்கள்.

சத்ரியன் said...

பகிர்வு அருமை வேல்கண்ணன்.

santhanakrishnan said...

வண்ணதாசனையும்,கல்யாண்ஜியையும்
வாசித்திருக்கிறேன். கேட்டதில்லை.
கேட்டதைச் சொல்லுங்கள்.
கேட்டுக் கொள்கிறோம்.

நிலாமகள் said...

மிக்க நன்றி வேல்கண்ணன் ... வண்ணதாசனைப் படிப்பதிலும் பகிர்வதிலும் எங்களுக்கும் பெருமிதமும் மகிழ்வும் அல்லாமல் வேறன்ன...!

அழகழகாக ஆயிரம் பெயர்கள் தெரிந்தாயிற்று... கல்யாண்ஜிக்கு ஈடாக ஒன்றில்லையே...

vasan said...

பாட்டிலில் ந‌தி நீரின் இறுதி ஊர்வ‌ல‌ம்,
காங்கிரீட் காடுக‌ளில் ந‌திக‌ளின் சமாதி.

தமிழ் said...

நல்ல கவிதை.. பகிர்வுக்கு நன்றி !
வண்ணதாசனின் சிறுகதைத் தொகுப்பு 'பெய்தலும் ஓய்தலும்'..

Vel Kannan said...

எனது தளத்திற்கு வந்து ,அமர்ந்து கருத்தும் வாழ்த்தும் திருத்தமும் சொன்ன அனனவருக்கும் அன்பும் நன்றியும்