பிறிதொரு நாளில்
தவிர்க்கப்படும் 
உன் பார்வைகள் புறமுதுகில்
துரத்தி துவண்டுவிடுகிறது
நினைவில் வைத்துக்கொண்ட
சொற்கள் பயனற்று போகின்றன
நடந்தேறிய நிகழ்வுகள்  
அனைத்தையும் எரிக்கிறது
என் வீட்டின் சுவர்கள்
இருள் படர தொடங்கியதும்
மிகுஅசதியை உணர்கிறேன்
சுருங்கி படுக்குமெனக்கு 
எழுவதற்கு  மனமில்லை
ஏன் ...யாருக்கு... எனப்படும் 
கேள்விகளே 
அதிகம் சுருங்கவைக்கிறது 
துரோகத்தின் சாயம் கலையக்கூடும்
பிறிதொரு நாளில் மீண்டு வருகிறேன்
இவ்விலங்கிடமிருந்து


மே -2011 உயிர் எழுத்து இதழில் வெளியான எனது கவிதை 
நன்றி : உயிர் எழுத்து

6 comments:

Rathnavel said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

துரோகத்தின் சாயம் கலையக்கூடும்//

வாழ்த்துக்கள்.

கல்யாணி சுரேஷ் said...

இப்படி சாயம் வெளுத்து போன பல துரோகங்களை பார்த்தாச்சு நண்பா.

ஜோயல்சன் =9940143966 said...

மிகவும் அருமை

Vel Kannan said...

ரத்தினவேல் அவர்கள்
நண்பர் இராஜ ராஜேஸ்வரி
தோழி கல்யாணி
நண்பர் ஜோயல் சன்
அனைவருக்கும் நன்றியும் அன்பும்

உயிரோடை said...

வாழ்த்துகள் வேல்கண்ணன்