நினைவோட்டம்கரையோரத்து மணலை
இருகைகளால் அள்ளி
மூடினேன்.
மூடிய கைகளுக்குள்
குறுகுறுத்து
ஓடிக்கொண்டிருக்கிறது
நதி 

மே -2011 உயிர் எழுத்து இதழில் வெளியான எனது கவிதை 
நன்றி : உயிர் எழுத்து

17 comments:

சுந்தர்ஜி said...

மண்ணில் ஓடிய நதிய உங்களில் கைகளில் ஓடி இப்போது என் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது வேல்கண்ணன்.

கனவுகளின் காதலன் said...

ஆற்றை கைகளிற்குள் பொதிந்துவிட்ட வரிகள் ரசிக்க வைக்கின்றன நண்பரே.

ராமலக்ஷ்மி said...

மிக அருமை:)!

Rathnavel said...

நல்ல கவிதை.

சத்ரியன் said...

படிக்கையில் மனதுக்குள் நுழைந்து ஓடுகிறது, வரி.

மிருணா said...

வாசிக்கும்போதே கைகளில் நதி குறுகுறுப்பது போலொரு உணர்வு. கவிதை நன்றாக இருக்கிறது திரு.வேல்கண்ணன்.

வித்யாஷ‌ங்கர் said...

நல்ல அனுபவம் நல்ல கவிதையகீர்ருகிறது

இராஜராஜேஸ்வரி said...

குறுகுறுத்து
ஓடிக்கொண்டிருக்கிறது
நதி //
குறுகுறுக்கிறது.

santhanakrishnan said...

இப்பொழுது
நிறைய
நதிகளை
மணல்
தான்
ஞாபக
படுத்திக்
கொண்டிருக்கிறது.

நிலாமகள் said...

ம‌ண‌லின் குறுகுறுப்பு மீட்டெடுக்க‌வொண்ணாத‌ ந‌தியின் ஏக்க‌த்தையும் சொல்வ‌தாய்... க‌விதைய‌ழ‌கு சொற்செட்டுட‌னான‌ க‌ருத்தை வீர்ய‌ப்ப‌டுத்துவ‌தால் வ‌சீக‌ரிக்க‌ப்ப‌ட்டேன் வேல் சார்.

நிரூபன் said...

குறுகிய வரிகளில் நிறைவான பொருள் தரும் கவிதை. அருமையாக இருக்கிறது சகோ.

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

வரிகள் மிக அருமை..

திருநாவுக்கரசு பழனிசாமி said...

அருமை :-)

Harani said...

ஏற்கெனவே படித்து பிரமித்தகவிதை வேல்கண்ணன். அழகான படிமம். சின்னச்சின்ன சொற்கள். அழகாய் படிக்கிற ஒவ்வொரு மனதிலும் ஒடுகிறது இன்ப நதி.

Vel Kannan said...

எங்களது இனிய சுந்தர் ஜி

நண்பர் கனவுகளின் காதலன்

நண்பர் ராமலக்ஷ்மி

நண்பர் ரத்னவேல்

நண்பர் சத்ரியன்

நண்பர் மிருணா

நண்பர் வித்யாஷங்கர் (உங்களின் வருகை எனக்கு மிகவும் மகிழ்வும் ஊக்கமும் தருகிறது )

நண்பர் இராஜராஜேஸ்வரி

நண்பர் மது

நண்பர் நிலா மகள்

நண்பர் நிரூபன்

தோழி பிரஷா

நண்பர் தி. பழனிச்சாமி

நண்பர் ஹரிணி


உங்களின் பேரன்பும் ஊக்கமும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்கிறது
எனது நன்றியும் அன்பும் நிறையவே

உயிரோடை said...

வண்ணதாசனின் ஒரு கவிதையை நினைவூட்டுது வேல்கண்ணன் இந்த கவிதை

Vel Kannan said...

நன்றி உயிரோடை, அந்த கவிதையையும் சொல்லியிருந்தால் பெரும் மகிழ்வு கொள்வேன்