வேள்வி
இயங்கு திரையில் தொலைகிறது இயற்பியல் தாவோ 
மாயக்கம்பளம் கோணங்கியின் எழுது மையில் கரைகிறது 
நீளும் மெளன மலையின் தவம்
அடைக்காப்பது நிலையாமையின் 
நிர்மூலங்கள் 
தன் எதிரில் நிற்கும் கிளி வழித்துணைக்கு அல்ல
தன்னில் பசியாறுவதற்கு மட்டுமேயென அறிந்திருக்கும் 
இலவ மனம். 
சுற்றத்தாரை பொழியும் அமிலத்திலிருந்து
காப்பதற்கு கோபாலன் நம்பியிருப்பது 
ஒற்றைப்பனை
பெருங்காதை  இளவரசியை
மீட்பதற்கு மிஞ்சியிருப்பது  
பொய்க்கால் குதிரை 
உறைந்த சுவாசம் 
புல்லாங்குழலுக்குள் இசைத்த வண்ணமிருக்கின்றன 
அணையா கீதங்கள்
இறுதி சொற்களுக்குள் 
தொடங்கிவிடும் கவிதையாய் 
இறுதி நொடிக்குள் வாழ்ந்து விடலாமென்று 
நாமும் பிறகும் 

நன்றி :  361˚

தொடர்புக்கு : 
361degreelittlemagazine@gmail.com

நன்றி : நரன் 

8 comments:

Rathnavel said...

நல்ல கவிதை.

இராஜராஜேஸ்வரி said...

உறைந்த சுவாசம்
புல்லாங்குழலுக்குள் இசைத்த வண்ணமிருக்கின்றன //
Nice.

திருநாவுக்கரசு பழனிசாமி said...

உவமைகளில் வசீகரிக்கிறது கவிதை

சுந்தர்ஜி said...

திருவின் வார்த்தைகளை உபயோகித்துக் கொள்கிறேன்.

மிருணா said...

வித்தியாசமான வாசிப்பு அனுபவம். இறுதி வரிகள் மிக அருமை.கவிதை புரியவில்லை என்று ஒரு புறம் சொல்லிக் கொண்டு(!) இப்படி கவிதைகள் எழுதும் ஒருவர்.

உயிரோடை said...

கவிதை நன்று. வாழ்த்துகள்

Vel Kannan said...

நன்றியும் அன்பும் ரத்னவேல் ஐயா
நன்றியும் அன்பும் இராஜராஜேஸ்வரி
நன்றியும் அன்பும் திரு.
நன்றியும் அன்பும் சுந்தர் ஜி
நன்றியும் அன்பும் மிருணா
நன்றியும் அன்பும் உயிரோடை
உங்களின் வலைபூக்களுக்கு வந்து நாளாயிற்று
விரைவில வருகிறேன்

hemikrish said...

தமிழ் சொல்லாடல் மிக அழகு...அருமையான விவரிப்பு..:)
congrats vel kannan