அமிழ மறுக்கும் பந்துகள்



நீ
என் மீது எறியும் எறிபந்துகள்
என் முகத்தையே தாக்குகின்றன
பால்யம்
தாண்டியும் தெறிக்கும் வலி
கன்றிப் போயிருப்பதை
வடுக்களுடன் நினைத்துக்  கொள்கிறேன்.
பதிலுக்கு நான் எறியும் எறிபந்துகள்
உன்னில் எதையும் குறிவைப்பதுமில்லை
தாக்குவதுமில்லை
இலக்கின்றி எறியப்படும் என் பந்துகள்
உன் பால்யத்திற்குள் தொலைந்து போகாமல்
சுழன்று கொண்டேயிருக்கும்
இறகின் லாகவத்துடன்
நீ
திரும்பிப்  பார்க்க நேரிடும்
பின்னொரு பருவதில்
உன் பால்யமே  வீழ்த்திவிடும்
என்
அமிழ மறுக்கும் பந்துகள்


நன்றி : கல்கி

9 comments:

நிலாமகள் said...

சுழன்று கொண்டேயிருக்கும்
இறகின் லாகவத்துடன்//

க‌ல்கியிலும் ப‌டித்தேன் சார். இலாவ‌க‌மான‌ சொற்க‌ள் அழ‌கு.

Anonymous said...

Good one sir

தமிழ்வாசி பிரகாஷ் said...

கவிதை பகிர்வுக்கு நன்றி....


வந்தேமாதரம் சசி-யின் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி - விரைவில்!

Ashok D said...

:)

இன்றைய கவிதை said...

சுழன்று கொண்டேயிருக்கும்
இறகின் லாகவத்துடன்
நீ
திரும்பிப் பார்க்க நேரிடும்
பின்னொரு பருவதில்
உன் பால்யமே வீழ்த்திவிடும்
என்
அமிழ மறுக்கும் பந்துகள்


அருமை வேல் கண்ணன்
நம்மில் பலரிடமும் இவ் அமிழ மறுக்கும் பந்துகள் அதிகமுண்டு அழகான கவிதை ஆழமான சிந்தனை

நன்றி
ஜேகே

rvelkannan said...

எனது நன்றியும் அன்பும்
நிலாமகள்
தமிழ்வாசி பிரகாஷ்
ரத்னவேல்
D .R . அசோக்
இன்றைய கவிதை ஜே கே

சிவகுமாரன் said...

என்னுள்ளும்
அமிழ மறுக்கும்
பந்துகள்....
உங்கள் கவிதைகள்.
ஆட்டம் போட்டபடி.

rvelkannan said...

மிகுந்த நன்றி சிவகுமாரன்

இராஜராஜேஸ்வரி said...

பால்யத்தைப் பகிரும் அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..