உறைந்த ஒரு நொடியில்கோப்பையை நிரப்பி தருகிறேன்
மேசை மீதமர்ந்து இருக்கிறாய்
இடக்கால் மீது வலக்கால் அமைத்து
ஒருக்களித்தவாறே

மதுவிற்கு மேலாகவும் உனது பார்வை

உனது உதடுநாவை தீண்டிய
திரவத்தை
சில நொடிகளுக்கு பின்பே அருந்துகிறேன்
ஈரத்துடன் ஒரு முறை முத்தமிடுகிறேன்

கால்களுக்கு  இடையே இறுக்கி கொள்கிறாய்
பின்னும் முத்த ரசம் பருகிறேன்

கீழ்உதடு  கவ்வி மார்சாய்த்து மடி கிடக்கையில்
கோப்பை இறுதி மிடறு சிதறி வண்ணக்குமிழ் 

எழுகின்றன எனதெங்கும்.

நன்றி : இலக்கியச்சுற்றம்

No comments: