சுடர் வெம்மை

 
 
அப்பொழுது நான் மலையுடன் பேசினேன்
இறுதியாக நீ மலையை கடந்ததால்

அப்பொழுது நான் கடலுடன்  பேசினேன்
இறுதியாக நீ கடலில் கலந்ததால்

அப்பொழுது நான் மரத்துடன் பேசினேன்
இறுதியாக நீ பழங்களில் பசியாறியதால்
 
எப்பொழுதோ நீ பகிர்ந்த வெம்மையினால்
தனித்திருக்கிறேன்
இறுதியாக நான் ஒரே ஒரு சுடருடன்

நன்றி : இலக்கியச் சுற்றம் 

4 comments:

சுந்தர்ஜி said...

அருமை வேல்கண்ணன் கவிதையும் அந்த ப்ரொஃபைல் புகைப்பட ஓவியமும்.

சத்ரியன் said...

சுடர் வெம்மை தராது தான். ஆனால் எப்போதோ உணர்ந்த வெம்மையை நினைவூட்டும்.

திருநாவுக்கரசு பழனிசாமி said...

வெம்மைதான் பல சுடர்களை தீண்டிவிடுகிறது

vel kannan said...

சுந்தர் ஜி ,
சத்ரியன்,
திரு ,
மிக்க நன்றி