நிறம் என்பது சொல் அல்ல


உன் நிறம்
என்  நிறம் இல்லை
தேசியம் ஒரே நிறம் என பெருமை கொள்கிறாய்
நிறத்தை வைத்துக்கொண்டு
தேசியம் தேடிக்கொண்டு இருக்கிறேன்
  
எல்லோரும் நடிக்க வாருங்கள்
எப்பொழுதும் ராஜா வேஷம்
'அவா'ளுக்கே
  
"ராமர் இவர்
நம்பு, ராவணனை அழிப்பார்"
என்றாய்
இல்லை நண்பா
ராமருக்கு இரட்டை வேடம்
  
அங்கே பாரு நண்பா
ரத்த சிகப்பும்
கருவுற்ற தாயும்..
காவியில் மறைந்து போகும்
கத்தியும் 
  
ஆளை விழுங்கும்
பாம்பை கொன்று விட்டோம்
இறங்கி வா நண்பா
பசித்த சிங்கம்
காத்திருக்கிறது
  
பாதி நிரப்பபட்ட
குடுவையில் ஆரம்பிக்கிறது
உங்களின் அரசியல்
மீதியுள்ள
வெற்றிடத்தில் தத்தளிக்கிறது
எங்களின் ஆயுள்
  
உங்களுக்கு என்னவோ கோயில்
எங்களுக்கான வாசல் எங்கே
  
இனி
மசூதிகளும் தேவாலயங்களும்
கூட தோண்டி பார்க்கப்படலாம்
யார் கண்டார்கள் யாரேனும்
அவதார புருஷர்கள்
நிஷ்டையில் இருக்கக்கூடும்

  
என் மண்ணில் உலாவுவதற்கான
காலக்கெடுவை ஏற்றுக்கொண்டு
என் புழுதி தெருவிற்குள்
அனுமதி பெற்று நுழைந்தேன்.
என் வீடு பூட்டப்பட்டு கிடக்கிறது
வேறொருவனின் பூட்டுகளால்

நன்றி : யாவரும்.காம், சூரிய தாஸ்
ஓவியம் : இணைய தளத்தில் எடுக்கப்பட்டவை-நன்றி

No comments: