மெல்லிசை
கனலென ஒளிர்ந்த தருணத்தில்
சருகென உதிர்ந்த பொழுது
அந்த நட்சத்திரத்தைப் 
பார்த்திருக்க வேண்டும்.

வைகறைக் கீற்றில்
அந்திப் பனியில்
அந்தக் கவிதையைப்
படித்திருக்க வேண்டும்.

கணநேரத்தில் தாழ்ந்திறங்கி
சூட்சுமமாய் எழும்பிக் கரைந்த நொடிகளில்
அந்தப் பறவையின் மீச்சிறு ஒலியைக்
கேட்டிருக்க வேண்டும்.

நமக்கான பொதுவானவைகள் எல்லாம்
கலந்த பிறகும், இந்த இரவின் மீது
உன் வருகையின் மெல்லிசை
படர ஆரம்பிக்கிறது. 


நன்றி : அரவிந்த் யுவராஜ்
நன்றி : சிபி@மலைகள்.காம். 

No comments: