இருள்

மெதுவாக உள்நுழைந்து நெளியும் காதல்
புறம் பேசச் சொல்கிறது
மெல்லிய கனத்துடன் அலைவுறும்
இறகு காற்றுடன் உயிர்த்திருக்கிறது
மீச்சிறு பனித்துளிகள் நிலமெங்கும்
வெண்மீன்களை பரப்புகின்றன
மென்னொளி கீற்றில்
மிகச் சன்னமான பாடலை
கருப்பு வெள்ளை ஓவியம் இசைக்கிறது.
பளீரிட்ட வெளிச்சம்
இருள் மடிந்த கணம்
வாரிச் சுருட்டிக் கொள்கிறது
திட திரவ சுவாச காமம்.
-வேல் கண்ணன்
நன்றி : சொற்கள் - காலாண்டிதழ் மார்ச் 2018
Photography : Aamre Carthick

No comments: