அசைந்தாடும் தன்முனைப்பு


என் வீட்டின் மரமொன்று
காற்றின் இசைவால்
பக்கத்து வீட்டில்
விதை தூவியது
பொழுதொன்றில்
துளிர்த்து
படர்ந்து
வளர்ந்தது.
முன்னோர்களின் வரிசையில்
என் மரம்.
'என்னிடமிருந்து பெற்றாய்'
ஏளனமாக பார்த்தேன்
இரு மரங்களும்
எண்ணிக்கொண்டன
'நாம்' என்று.

No comments: