பெயரிடப்படாத ஒரு தெருவாசி


வாழ்க்கை புத்தகத்திலிருந்து பிய்த்து எடுத்தது போல, நட்ட
நடுவில் இரண்டு பக்கங்களை மட்டும் காட்டும். முன்கதைச்
சுருக்கங்களும், பின்கதைச் சுருக்கங்களும் வாசிக்க கிடைப்பதே
இல்லை, கடைசி வரை.
'அகம்-புறம்' - வண்ணதாசன்


(முகவரி)
                      எந்த தேசத்தின் அடையாளமும்  இல்லை
                      எல்லா இனத்தின் மிச்சமாகவும் தெரிந்தான்
(பார்வை)
                      ஓரிடத்திலேயே நிலை கொண்டியிருக்கும்
                      ஓரிடம் நில்லாமல் அலையும்
                      திடுக்கிட்ட நொடியில் தெருவே குலுங்கி
                      நிற்பது போல் தோன்றும்
(மொழி)
                     புகைந்த சிகரெட்டை 'தா' என்ற இருவிரல்
                     சிற்றுண்டி விடுதியில் வயிற்றை தட்டி 'பசி' என்ற
                     புறங்கை
                     தேநீர்க்கடையில் 'டீ' என்று உயர்த்திய
                     கட்டைவிரலை யாரும் மறுத்ததில்லை

ஆரம்பத்தில் வேற்று மனிதனாகவும்
பின்பு பழகிய ஒன்றாகவும்
முன்பே
கடந்தவனாக தெரிந்தான்

ஒரு நாளில் ..

நாளிதழை படித்தவன்
கால் சட்டை பையிலிருந்து
கசங்கிய காகிதத்தை எடுத்து
முன் பின் பார்த்தான்
இரண்டையும் கிழித்தெறிந்தான்
அன்றிலிருந்து
ஒரு கவளமோ மிடறோ
உள்செல்லவில்லை
திணித்த
காசு முதலானவைகளை
வீசிஎறிந்த உறுதி
மூத்திரசந்தில்
ஒருக்களித்து கிடந்த
போதும் குலையவில்லை
நிலைகுத்திய
கண்களில்.

13 comments:

கல்யாணி சுரேஷ் said...

திணித்த
காசு முதலானவைகளை
வீசிஎறிந்த உறுதி
மூத்திர சந்தில்
ஒருக்களித்து கிடந்த
போதும் குலையவில்லை
நிலைகுத்திய கண்களில்.


இது போன்ற உறுதி நம்மை போன்றவர்களிடமும் இருக்கிறதா கண்ணன்?

கண்ணன் said...

கல்யாணி சுரேஷ்க்கு
பதில் சொல்ல தெரியவில்லை தோழி
'உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா '
என்று வேண்டுமானால் கேட்டு கொண்டே இருப்போம்.
நன்றி

பா.ராஜாராம் said...

நானும் பார்த்திருக்கிறேன்.நீங்களும் பார்த்திருக்கிறீர்கள்.யாரும் பார்க்கலாம்.ஆனால் இப்படி யாருக்காவதுதான் பதிய வாய்க்கிறது.உணர்ந்ததை அப்படியே உணர்த்த ஒரு மொழி வசதி வேணும்.அது உங்களுக்கு அழகாய் வாய்த்திருக்கிறது.நல்லா வருவீங்க கண்ணா நீங்கள்.

கண்ணன் said...

பா.ரா விற்கு நன்றி பல !
உங்களின் வாழ்த்து எனக்கு பெரும் ஊக்கத்தை தருகிறது

ஹேமா said...

கண்ணன்,இயல்பு வாழ்வின் எரிச்சல்.
யார் மாறுவார்கள்.
யார் மாற்றுவார்கள்.

கண்ணன் said...

ஹேமாவின் தொடர் வாசிப்பிற்கு நன்றி

//இயல்பு வாழ்வின் எரிச்சல்//
ஒரு வேளை வாழ்வின் இயல்புகளில் இதுவும் ஒன்றாகும் என எண்ணுகிறேன்

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

அருமையாக இருக்கிறது. தொடருங்கள்..

கண்ணன் said...

நண்பர்
கனவுகளின் காதலனுக்கு நன்றி

Admin said...

தொடருங்கள்..

கண்ணன் said...

சந்ரு அவர்களின் வருகைக்கும் தொடர்தலுக்கும் நன்றி

ஹேமா said...

வாங்க உப்புமடச்சந்திக்கு.
தொடர்பதிவுக்கு உங்களையும் சேர்த்திருக்கேன்.

அன்புடன் நான் said...

தோழரே நல்ல பதிவு.

கண்ணன் said...

தொடர்பதிவுக்கு அழைத்ததற்கு நன்றி ஹேமா
****************
தோழர் சி.கருணாகரசு-க்கு நன்றி