வேல் கண்ணன் கவிதைகள்


1.
தீரவில்லை தான்
அழவைப்பதற்கும்
அணைப்பதற்கும்
கொஞ்சம்
கவிதையும்
மழையும்
2.
கடந்து செல்கிறேன்
நீ கூட வருவதாய்
நினைத்து கொண்டு
3.
தண்ணீரில்
அடித்து சென்றது
கழிவுகளும்
கனவுகளும்
4.
ஆழி சூல் உலகு
பூமி கூட
சொந்த 'காலில்'
5.
கவிதை
குடி கொண்டது
கவிஞனைக்
'குடி' கொன்றது
6.
நிலைத்த மெளனம்
கலைந்த சிரிப்புமுமாய்
இருக்க வாய்த்திருக்கிறது
மரங்களுக்கு
7.
தன்னை தேடுபவர்களை
தெரிந்தே தான் விடுகிறது
விலைமாதுகளுக்கு
கடவுளுக்கு மட்டும்....
8.
கரையிலிருந்து நடந்தேன்
மிச்சமாய் ஒட்டியிருந்தது
மணற்துகளும் நதியும்
9.
பெரும் சன திடலில்
உன் சுட்டு விரல்
கூட தராத
நயவஞ்சகி நீ !
10.
வெற்றுதாளில் கிறுக்கியது
குழந்தை
மோட்சமடைந்தது மரம்

14 comments:

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

சொல்ல வார்த்தைகள் இல்லை, உணர்ந்தேன் மனதில்

அற்புதமான வரிகள்.

கல்யாணி சுரேஷ் said...

//கடந்து செல்கிறேன்
நீ கூட வருவதாய்
நினைத்து கொண்டு//

Superb.

ஹேமா said...

//தன்னை தேடுபவர்களை
தெரிந்தே தான் விடுகிறது
விலைமாதுகளுக்கு
கடவுளுக்கு மட்டும்....//

கண்ணன் வரிகள் ஒவ்வொன்றிலும் ஏதோ ஒன்று ஒட்டிக்கிடக்கிறது.அருமை.

இன்றைய கவிதை said...

வேல் கண்ணன் ஸார்!
கலக்கிட்டீங்க....

//கவிதை
குடி கொண்டது
கவிஞனைக்
'குடி' கொன்றது//

அருமை ஸார்!

மண்குதிரை said...

thangkal kavithaikalaiyum vaasiththeen. ungkal anupavam therikiRathu.

ungkalaip parri nanbarkal muulam arinthirukkireen. ippoothuthaan santhikka mutinthaathu.

nanri.

பா.ராஜாராம் said...

எல்லாம் நல்லா இருக்கு வேல் கண்ணா.ஆழி சூழ் உலகும்,கலைந்த சிரிப்பு மரங்களும்,ரொம்ப பிடிச்சு போகுது.உங்களை எனக்கு பிடிச்சது போல!

என்னை ஏன் உங்களுக்கு பிடிக்கவில்லை? said...

//
கடந்து செல்கிறேன்
நீ கூட வருவதாய்
நினைத்து கொண்டு
//

கடந்து செல்லும் கவிதைகளினூடே இந்தக் கவிதைகள் இன்று முழுதும் என் கூடவே வந்து கொண்டு இருக்கும்.

அனைத்தும் அருமை.

வேல் கண்ணன் said...

நண்பர் கனவுகளின் காதலனுக்கு
உங்களின் வார்த்தைகள் என்னை
ஊக்கப்படுத்துகின்றன. நன்றி
****************************
தோழி கல்யாணிக்கு நன்றி
****************************
தோழி ஹேமா-விற்கு நன்றி
*******************************
'இன்றைய கவிதை' வருகைக்கும்
தொடர்தலுக்கும் கருத்துக்கும் நன்றி
*******************************
மண்குதிரை - யின் வருகை
எனக்கு மகிழ்சி அளிக்கிறது.
மிக்க நன்றி
**************************
பா.ராஜாராம் அவர்களுக்கு நன்றி
//உங்களை எனக்கு பிடிச்சது போல//
இதை விட வேறென்ன வேண்டும் எனக்கு. மிக்க நன்றி.
***********************
தோழர் தாமோதரன் வருகைக்கும்
தொடர்தலுக்கும் கருத்துக்கும் நன்றி

பா.ராஜாராம் said...

ஆறாம் என்னிட்ட மரம் கவிதையை "என்னை கவர்ந்த வரிகள்"லுக்காக என் தளத்தில் உபயோக படுத்தி இருக்கேன் வேல்கண்ணா-உங்கள் அனுமதி இல்லாமல்.இதுவும் என் தளம் என்கிற உரிமையில்!அன்பும் நன்றியும்,வேல்கண்ணா.

வேல் கண்ணன் said...

இதற்கு நான் பெருமை அடைகிறேன். இதை தக்க வைத்து கொள்ள நான் இன்னும்
இன்னும் என்னை தகுதி உள்ளவனாக உருவாக்கி கொள்கிறேன்
மிக்க நன்றி பா.ரா

சி. கருணாகரசு said...

கரையிலிருந்து நடந்தேன்
மிச்சமாய் ஒட்டியிருந்தது
மணற்துகளும் நதியும்//

க‌ன‌ க‌ச்சித‌ம்... அனைத்தும் அருமை.

வேல் கண்ணன் said...

நன்றிங்க தோழர் சி. கருணாகரசு

r.selvakkumar said...

தண்ணீரில்
அடித்து சென்றது
கழிவுகளும்
கனவுகளும்

விரைந்து படிக்கும்போது, இந்த வரிகள் நெஞ்சில் தங்கின.

velkannan said...

வாங்க ஆர். செல்வகுமார்
முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி