இருந்து விட்டு போகட்டும்


உனது நண்பர்கள் ஆறுபேரை
அழைத்து வந்தாய்
அறிமுகமும் செய்தாய்
அவரவர் பெயர் ஊர்
புனைபெயர்
மற்றும்
நீண்ட நட்பு
நெடுநாள் நட்பு
நெருங்கிய நட்பு
பால்ய நட்பு
பிரித்தும் சொன்னாய்
'என்ன செய்கிறார்கள்'
"கவிதை செய்கிறார்கள்"
..ஆக மொத்தம் உன்னுடன்
சேர்ந்து ஏழு

9 comments:

ஹேமா said...

கண்ணன் எங்களையும் சேர்த்துக் கொள்ளாமல் விட்டீர்களே.இல்லை இதற்குள் நாங்களும் இருக்கிறோமா !இருந்தால் எண்ணிக்கை கூடிக்கொள்ளுமே !

பா.ராஜாராம் said...

நல்லா இருக்கு வேல்கண்ணா.கடைசி வரியில் spell mistake உண்டு சரி பண்ணுங்கள்.

வேல் கண்ணன் said...

ஹேமாவிற்கு நன்றி.
'விமர்சன கவிதை' என்ற தலைப்பின் கீழ்
எழுதப்பட்டது. எழுத ஆரம்பிக்கும் அனைவரும் முதலில்
கவிதை தான் எழுதுகிறார்கள் என்று
நண்பர் கூறினார். சிலர் இதில் தங்கி விடுவதாகவும்
சிலர் தாண்டி(?) செல்வதாகவும் சொன்னார்.
தங்கி இருப்பதா தாண்டி செல்வதா என்று முடிவு
செய்வது நாமல்ல என்பதை நான் அறிவேன்.
இருப்பினும் அவரின் பேச்சு என்னை வேறு தளத்தில்
யோசிக்க வைத்தது.
******************************
பா.ரா விற்கு நன்றி.
திருத்தி விட்டேன் என்று எண்ணுகிறேன்

இன்றைய கவிதை said...

//"கவிதை செய்கிறார்கள்"//

அருமையான வார்த்தைகள்!

எழுதுவதற்கும்/செய்வதற்கும் நிறைய்ய வித்யாசம் இருக்கிறது!

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

உங்கள் வரிகளின் எளிமை, அதனுள் பொதிந்திருக்கும் ரகசிய அழகு, அதுவே உங்கள் அழகு.

மண்குதிரை said...

:-) nice sir

கல்யாணி சுரேஷ் said...

கவிதை அருமை கண்ணன். ( பிழை திருத்தப்படவில்லை.)

அன்புடன் நான் said...

கவிதை அருமையாக இருக்கு நண்பா.

வேல் கண்ணன் said...

'இன்றைய கவிதை'க்கு நன்றி

நண்பர் கனவுகளின் காதலுனுக்கு நன்றி

மண் குதிரைக்கு நன்றி

கல்யாணி சுரேஷ்க்கு நன்றி

தோழர் சி. கருணாகரசுக்கு நன்றி