பிரதான சாலையின் இரு நிகழ்வுகளும் பெருமழையும்

(அகநாழிகை அக்டோபர் 2009 இதழில் வெளியான கவிதை)
1.
கால் பரப்பி
குப்புற கிடந்தவனை
வெள்ளை துணியால்
போர்த்தினார்கள்
அவனிடமிருந்து
அலைபேசியின்
அம்ருதவர்ஷினியை
மழை கரைத்தது

சிறு கூட்டமும் தெறித்தது.
2.
மண் சிதை பொம்மையை
செய்தவனும்
விற்பவனும் ஆகியவன்
பெருகி வந்த

வட்டியையும் மழையையும்
எண்ணி சிதைந்தான்.

உள்வைத்த
பொம்மைகளுக்குள்
ஒடுங்கினான்
3.
அவன்பாடு போய் சேர்ந்தான்
இவன்பாடு நிற்கின்றான்
மழை வலுத்தது.

நன்றி : அகநாழிகை

9 comments:

இன்றைய கவிதை said...

//பெருகி வந்த
வட்டியையும் மழையையும்
எண்ணி சிதைந்தான்.
உள்வைத்த
பொம்மைகளுக்குள்
ஒடுங்கினான்
//

அருமை!
பொட்டில் அடித்தாற்போல!

கல்யாணி சுரேஷ் said...

இரு வேறு நிகழ்வுகளின் கோர்வையோ? அருமையா இருக்கு கண்ணன்.

அன்புடன் நான் said...

அருமை தோழரே... அதிலும் //அம்ருதவர்ஷினியை
மழை கரைத்தது // வித்தியாச‌மாக‌ உள்ள‌து... ப‌ராட்டுக்க‌ள்.

வேல் கண்ணன் said...

இனிய கவிதை நண்பர்களின்
கருத்துரைக்கு நன்றி
***
ஆம் கல்யாணி சுரேஷ்.
இரண்டு நிகழ்வையும் மழை
(இயற்கை)யால் கோர்க்க நினைத்தேன்
***
தோழர் கருணாகரசுக்கு நன்றி
*

கனவுகளின் காதலன் said...

நண்பரே, அருமை. மழையின் துளிகளோடு கரைந்தோடிடாதா அவலங்களும் என்க் கேட்கத் தோன்றுகிறது.

ஹேமா said...

கண்ணன்,
மழையால் வரும் சங்கடத்தை இரண்டு நிகழ்வாகக் கவிக்கோர்வையாக்கி
இருக்கிறீர்கள்.அழகு.

வேல் கண்ணன் said...

நண்பர் கனவுகளின் காதலனுக்கு
கரைந்தது மனம் மட்டுமே. நன்றி
*****************
ஹேமா ஒரு திருத்தம்
முதல் நிகழ்வு சங்கடம் அல்ல
கவனிக்க : அம்ருதவர்ஷினியை
மழை கரைத்தது //
மற்றபடி நன்றி ஹேமா
*****************

மிருணா said...

மரணம், இசை,ஸ்திதி, மழை எல்லாம் சேர்ந்து கவிதைக்கான கனத்தை உருவாக்குகின்றன. நல்ல கவிதை.உங்கள் தளத்தின் வண்ணம் கூட அழகு.

rvelkannan said...

நன்றி சைக்கிள் உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும்...