கிண்ணத்தில்..

(தமிழ்த்தோட்டம்  இணைய தளத்தில் வெளியான எனது கவிதை)

கிண்ணத்தில்
                       மசிய பிசையப்பட்ட
                       பால்சோற்று கரைசல்
                       நீள் வடிவ விளிம்புகளில்
                       தளும்புகிறது.

கிண்ணத்தில்
                      பசியாறுவதற்கு தவழும்
                      மழலையோன்றும்
                      காட்டு விலங்கொன்றும்
                      நெருங்கின்றன.

கிண்ணத்தில்

                    தற்செயலாகவோ
                    திட்டமிட்டோ
                    மழலை குதறிய விலங்கின்
                    பற்களிலிருந்து ஒழுகியது
                    உதிரம்.

கிண்ணத்திலிருந்து....
                   பெருக்கெடுத்தோடுகிறது
                   வெறியும் பசியும்.

 
நன்றி : தமிழ்த்தோட்டம்
 

10 comments:

தேவன் said...

கவிதை அருமை !!

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

அருமை.

இன்றைய கவிதை said...

மனதைப் பிசையுதய்யா
உமது கவிதை!

-கேயார்

இன்றைய கவிதை said...

//கிண்ணத்திலிருந்து....
பெருக்கெடுத்தோடுகிறது
வெறியும் பசியும்.//



நன்றாக இருக்கிறது வேல்கண்ணன்



நன்றி
ஜேகே

கல்யாணி சுரேஷ் said...

கவிதையை வாசிக்கும்போது மனதினுள் விரிந்த காட்சி நடுங்க செய்துவிட்டது.

பா.ராஜாராம் said...

பதட்டம் ஏற்படுத்தும் காட்சி,வேல்கண்ணா.தமிழ் பூங்காவுக்கு வாழ்த்துக்கள்,சகோதரா!

ஹேமா said...

கண்ணன் எதைக் கருவாக நினைத்து எழுதினீர்களோ..ஆனால் ஒரு பயங்கரம் நடக்கிறது கிண்ணத்தில்.
பால்சோற்றுக்காக.

வேல் கண்ணன் said...

நண்பர் கேசவன்.கு - ன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

நண்பர் கனவுகளின் காதலுனுக்கு மிக்க நன்றி

இன்றைய கவிதை நண்பர்கள் கேயார் மற்றும் ஜேகே -க்கு நன்றி

கல்யாணி சுரேஷ்க்கு நன்றி

பா.ரா அவர்களுக்கு நன்றி

ஹேமா - க்கு நன்றி பயங்கரத்தை வைத்து தான் கருவே.

மண்குதிரை said...

வாசிக்கும் போது பதட்டமாக இருக்கிறது

rvelkannan said...

மண் குதிரையின் கருத்துக்கு நன்றி.
உங்களின் இந்த வரிகளில்
//அடிமைகளும் தின்று அழித்த
கடைசி டூடூவின் தாடை எலும்பு
வடக்கே கிரம்பேவில் வசிக்கும்
ஆப்பிரிக்க அடிமையொருவனின்
கனவில் வந்துகொண்டிருக்கிறதாம்...//
இப்படி தான் இருந்தது எனக்கும்