துளியின் வலி


சதுப்புகள் படுத்துறங்கும் நிலம்
படிமங்கள் உள்ளடக்கிய
நீண்ட மலைகளில் பறவைகளின் நிசப்தம்
ஓடும் நதியின் கீழ் அனைத்தும் மெளனிக்கின்றன
இளமஞ்சள் பூக்கும் கரை ஓரத்தில்
காத்திருக்கும் அவளின் ஒற்றைக்கண்ணீர் துளி
பிரளய வலி செய்கிறது
 
நன்றி : உயிரோசை
                                              ~  ~  ~

10 comments:

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

மிகவும் அருமையாக வடித்திருக்கிறீர்கள்.

சத்ரியன் said...

//ஓடும் நதியின் கீழ் அனைத்தும் மெளனிக்கின்றன//

நிதர்சன வரி(லி).

Unknown said...

பிரளய வலி.. :(

ஜெனோவா said...

ஒற்றைக் கண்ணீர் துளி , கரையை மீறி நதியில் சேர்ந்து , நதியை உப்பாக்கும் முன் ... யாரேனும் அல்லது நீங்களாவது அவளின் காத்திருப்பை முடித்து வைப்பீர்களாக .

நன்றாக வந்திருக்கிறது வேல்கண்ணன் .
வாழ்த்துக்கள்

உயிரோடை said...

க‌விதை ந‌ன்று ந‌ண்பா. வாழ்த்துக‌ளும்

பா.ராஜாராம் said...

oops!

excelent,velkanna.

rvelkannan said...

நண்பர் கனவுகளின் காதலனுக்கு நன்றி

நன்றி சத்ரியா

வாங்க ஆறுமுகம் முருகேசன் எனது நன்றியும் அன்பும்

நன்றி ஜெனோவா கவிதையான பின்னுட்டத்திற்கு
//நீங்களாவது // முயற்சி செய்கிறேன் நண்பரே

உயிரோடை , பா.ரா தொடர் ஊக்கத்திற்கும் அன்பிற்கும்
நன்றியும் அன்பும்
*****

ஹேமா said...

வார்த்தைகளின் உச்சம்
கவிதை வலிதான் !

rvelkannan said...

ஆம் உண்மைதான் தோழி ஹேமா கருத்துக்கு நன்றி

Brownsville Sandblasting said...

Helllo mate nice post