கதை
கதை
தேங்கிய நீரில்
காற்றின்
அதிர்வட்டம் சொல்கிறது
மழையின் கதை
(மீள்பதிவு)
நிலை
திக்கற்று தேம்பியலைந்தவனுக்கு
எதிர்ப்பட்டது நிலைக் கண்ணாடி
கண நேர பரிமாற்றத்துக்குப்
பின்
விலகி நடந்தவனிடம்
எதுவுமில்லை.
ஞாபகம்
நீ
விட்டுச் சென்ற
குடையில் மிச்சமிருக்கிறது
ஈரமும் வாசமும்
தாகம்
எஞ்சிய மெழுகுவர்த்தி.
வெறுமையைத் தணிக்கிறது
வழிந்தோடிய கரைசல்
வெம்மை
நன்றி : உயிரோசை
9 comments:
நண்பரே,
அருமையான கவிதைகள். குறிப்பாக, தாகம்.
அருமையான கவிதைகள்
கண்ணன் ஒன்றுக்கொன்று போட்டி போடும் கவிதைகள்.
என்றாலும் "நிலை" யின்
உணர்வு மௌனம் கொள்கிறது.
அனைத்துக் கவிதைகளுமே பிடித்திருந்தது நண்பா ..
வாழ்த்துக்கள்
ஞாபகம்
நீ
விட்டுச் சென்ற
குடையில் மிச்சமிருக்கிறது
ஈரமும் வாசமும்//
இருக்காதா பின்ன...???
மிக அருமை தோழரே.
வேல்கண்ணண்
ஒவ்வொன்றும் அருமை
நன்றி ஜேகே
என்றும் ஊக்கத்தை தரும்
கனவுகளின் காதலன்
செல்வராஜ் ஜெகதிசன்
ஹேமா
ஜெனோவா
சி. கருணாகரசு
ஜேகே
மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் மிகுந்த நன்றியும் அன்பும்.
ஈரமும் வாசமும் மிக அருமை
Thank You Dear Ramesh
Post a Comment