கரையான்கள் தின்றழித்த அச்சாணியற்ற சக்கரம் உதிரத்தொடங்குகிறது
மீண்டெழ முடியாத வலைகளில் சுழன்றடிக்கிறது
மிச்சக்காற்று
தகர கீரிடங்கள் நாற்காலிகளை அடைத்துக் கொண்டன
பகலிலும் பார்க்க முடிந்தது ஆந்தையை
இங்கு ஆள்பவர்களையும் அதிகாரிகளையும்
தவிர்த்து மீதியுள்ளவர்கள் தலையில்லாதவர்கள்
வீசியெறிந்த மாமிசத்துண்டுகள்
மனிதனுடையதா ?
மனிதனுக்குடையதா ?
தொன்மங்களின் தெய்வக்கல் ஒன்று
எல்லையிலிருந்து நகர ஆரம்பித்தது
மீண்டெழ முடியாத வலைகளில் சுழன்றடிக்கிறது
மிச்சக்காற்று
தகர கீரிடங்கள் நாற்காலிகளை அடைத்துக் கொண்டன
பகலிலும் பார்க்க முடிந்தது ஆந்தையை
இங்கு ஆள்பவர்களையும் அதிகாரிகளையும்
தவிர்த்து மீதியுள்ளவர்கள் தலையில்லாதவர்கள்
வீசியெறிந்த மாமிசத்துண்டுகள்
மனிதனுடையதா ?
மனிதனுக்குடையதா ?
தொன்மங்களின் தெய்வக்கல் ஒன்று
எல்லையிலிருந்து நகர ஆரம்பித்தது
~ ~ ~
18 comments:
Nice , but i cann't understand
அன்புள்ள கண்ணன்க்கு ,
படிக்க நன்றாக இருக்கிறது ஆனால் புரியவில்லை
/////வீசியெறிந்த மாமிசத்துண்டுகள்
மனிதனுடையதா ?
மனிதனுக்குடையதா ? /////
ஈட்டி வீசும் உணர்வையொத்த வார்த்தைகள். அருமை !
பகிர்வுக்கு நன்றி !
பேய்கள் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் ??
கரையான்கள் - தகர கிரீடங்கள் - ஆந்தை - மாமிச துண்டுகள் -- எல்லாம் சரி
//மீண்டெழ முடியாத வலைகளில் சுழன்றடிக்கிறது
மிச்சக்காற்று //
இங்குதான் நான் எதையோ தவற விட்ட உணர்வு ??
வீசிஎறிந்த மாமிசங்கள் சக மனிதனுடயவை , இன்னொரு சக மனிதனுக்கு .
நாம் அக்கறை சேர்ந்த பின் , ஆற்றில் வெள்ளம் வந்தால் நமக்கென்ன ?? மாமிசங்கள் பற்றி நாம் ஏன் கவலைப் பட வேண்டும் ..
கவலைப்படுவதற்கேன்று இருந்தவரும் ஏதும் செய்ய இயலாமல் வெளியேறிக் கொண்டிருக்கிறார் :(
ம்ம்ம் நான் எனக்கு புரிந்த மொழியில் அர்த்தப்படுத்திக்கொண்டேன் நண்பா :)
நண்பரே,
சிறப்பான ஆக்கம்.
சொல்லாடல் :)
சோகம் கவ்வுகிறது.... தோழரே.
முழு புரிதலில் நான் இல்லை.
//வீசியெறிந்த மாமிசத்துண்டுகள்
மனிதனுடையதா ?
மனிதனுக்குடையதா ?//
சதை குடைந்து மச்சைவரை வலியெடுக்கும் வரிகள்.
இயற்கைகூட வஞ்சகம் செய்யும் தருணத்தில் "தெய்வக்கல்"என்று சொல்லிவிட்டீர்கள் கண்ணன்.நகருமா?
ஏன் இந்த ரணகளம். இப்படி ஒரு தளமாற்றம். நல்லா இருக்குங்க வேல்கண்ணன். உயிரோசையில் வந்தமைக்கு வாழ்த்துகள்
/// கரையான்கள் தின்றழித்த அச்சாணியற்ற சக்கரம் உதிரத்தொடங்குகிறது
மீண்டெழ முடியாத வலைகளில் சுழன்றடிக்கிறது
மிச்சக்காற்று ///
தலைவனை இழந்த ஒரு இனத்தின் (அச்சாணியற்ற சக்கரம்) அழிவுகளையும், மீள முடியாமல் தொடரும் இன்னல்களையும் பேசுகிறது என் கண்களுக்கு..
/// தகர கீரிடங்கள் நாற்காலிகளை அடைத்துக் கொண்டன
பகலிலும் பார்க்க முடிந்தது ஆந்தையை ///
ஈழத்தின் இன்னும் விடியாத இரவுகளில் பகலில் ஆந்தைக்கு கண் தெளிவாய் தெரியும்தான்,
தகர கிரீடம் - போலி அரசன் - சரிதான்..
/// வீசியெறிந்த மாமிசத்துண்டுகள்
மனிதனுடையதா ?
மனிதனுக்குடையதா ? ///
திகைக்க வைக்கும் கேள்விதான்...
/// தொன்மங்களின் தெய்வக்கல் ஒன்று
எல்லையிலிருந்து நகர ஆரம்பித்தது ///
காலம் காலமாய் கடந்து மூத்த தலைவர் நினைவை தாங்கி நின்ற எல்லை கல் உடைப்பை குறித்து அழுகிறதா இவ் வரிகள்...
நன்றி ,
கமலேஷ்,ஜெனிவா விளக்கம்கொடுததமைக்கு
//வீசியெறிந்த மாமிசத்துண்டுகள்
மனிதனுடையதா ?
மனிதனுக்குடையதா//
இன்று நாம் தின்பதெல்லாமே மனிதனுடையது..
வார்த்தை உக்கிரம் அருமை..
www.narumugai.com
வணக்கம் விசு , வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நண்பர் பனித்துளி சங்கருக்கு நன்றியும் அன்பும்
நண்பர் ஜெனோ
//பேய்கள் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் ??//
ஒரே வரியில் புரிந்து கொண்டமைக்கும் விளக்கியதற்கும் நன்றி நண்பரே
நண்பர் கனவுகளின் காதலனுக்கு நன்றியும் அன்பும்
நன்றி அசோக் எனது அன்பும்
தோழர் கருணா , முழு புரிதலை ஜெனோ வும் கமலேஷ் -ம் தந்து இருப்பார்கள் என்று நம்புகிறேன் .
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழர்
நன்றி ஹேமா
நன்றி உயிரோடை
நண்பர் கமலேஷ்க்கு உங்களின் வரிகளில் எவ்வளவு ஊக்கம் அடைந்தேன் என்று சொல்லிமாளாது.
எழுதும் போது பட்ட இடர்கள் எல்லாம் நொடியில் கரைந்து விட்டது உங்களின் பின்னூட்டம் பார்த்து.
நன்றியும் அளவுகடந்த அன்பும் நண்ப
நறுமுகை வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Post a Comment