அடங்காத பசி புணர்ச்சி
நிற்காத கண்ணீர் ரத்தம்
நிறையாத துளைகள் செவிமடல்கள்
குறையாத நோய் தாகம்
மீளாத காலம் இளமை
இன்னும்
உடுத்தாத உடை முகமூடி பல
உடுத்தியவை நினைவில் இல்லை
(சில கிழிந்தும் தொங்குகிறது )
வாசிக்காதது மாதிரியே
எழுதாதவைகளும் எண்ணற்றவை
பொழுதுகள் போதவில்லை தான்
நட்சத்திரங்களை எண்ணுவதற்கு
ஆறுதல் ஒரே ஒரு
நிலவு.
நன்றி : உயிரோசை
23 comments:
நல்லாயிருக்கு வேல்கண்னன்.
எங்கள் வாழ்வுக்குத் தரப்பட்ட நேரங்கள் போதாமையாகவே இருக்கிறது.மூச்சு நிற்கும் தருணத்தில்கூட முடியாத அலுவல்கள் இருந்துகொண்டுதான் !
//வாசிக்காதது மாதிரியே
எழுதாதவைகளும் எண்ணற்றவை//
நிறைய எழுதுங்கள்.
வாழ்த்துகள்
நண்பரே,
சிறப்பான வரிகள்.
நல்லாயிருக்கு வேல்கண்னன்.
அழகான ஆறுதல் வேல்கண்ணண்,
ரசித்தேன்
நன்றி ஜேகே
நல்லாயிருக்கு நண்பா.
உயிரெழுத்தில் உங்கள் கவிதைகள்.
அத்தனையும் முத்துக்கள்.
வாழ்த்துக்கள்.
ரொம்ப நல்லா இருக்கு நண்பரே...
நன்றியும் அன்பும் மாதவராஜ் அவர்களுக்கு,
உங்களின் வருகையும் கருத்தும் ஊக்கம் அளிக்கிறது
நன்றியும் அன்பும் ஹேமாவிற்கு
அந்த ஏக்கம் தான் எனக்கும்
ஒரே ஒரு நிலவு - ஒரே ஒரு வாழ்வு
நன்றி லாவண்யா ...
உங்களின் அன்பும் வாழ்த்துகளும் பெரிதும் உதவுகின்றன அதற்கு.
நண்பர் கனவுகளின் காதலனுக்கு
உங்களின் வருகையும் வாழ்த்துகளும் ஊக்கமளிக்கிறது
நண்பர் செல்வராஜ் ஜெகதிசன்
இன்றைய கவிதை ஜே.கே மற்றும் நண்பர்களுக்கும்
நண்பர் ஆறுமுகம் முருகேசன்
அன்பும் நன்றியும்
நண்பர் சந்தானகிருஷ்ணன் ,
உங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றியும் அன்பும்
வாங்க கமலேஷ் உங்களுக்கு எனது நன்றியும் அன்பும்
ஒரு வாழ்வையும்
ஒரு நிலவைக்காணாதிருப்பது போலவே வீணடித்துவிடுகிறோம்.
இனிச் செய்ய வேண்டியவையும் இதில் அடங்கிவிடுகிறது.அற்புதம் கண்ணன்.உங்களை வாசிப்பது சுவாரஸ்யமாயிருக்கிறது.அடிக்கடி நேரமொதுக்கி வந்துவிடுகிறேன்.
உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சுந்தர் ஜி எனது அன்பும்
வாசிக்காதது மாதிரியே
எழுதாதவைகளும் எண்ணற்றவை--------enudaya valkaielum.... very nice line sir ...... RAMESH.
கவிதை மிக இயல்பா இருக்கு தோழரே.
Thanks to Dear Ramesh and Dear C.Karunakarasu
எல்லாக் கவிதைகளுமே மிக நன்றாக இருக்கின்றன நண்பா
நன்றி உழவன். நலமா....?
Post a Comment