பாதரசம்





மென்மாலையில்
என்னுள் நிரம்பி ததும்பும் அமிலம்
உன் நிழற் படத்தின் மல்லிகை வாசத்தில்
கொதிக்க ஆரம்பிக்கிறது

அறையெங்கும் அலைந்த வெள்ளைப்பூனை
மடியேறி அமர்ந்து கொண்டது.
இப்பொழுது வாள் வீச்சின் சப்தம் 

நன்றாக கேட்க ஆரம்பிக்கிறது

அவ்வப்போது அனக்கத்தை தனித்த
பக்கத்துவீட்டு தோழியும் 
மாற்றலாகி சென்று 
இன்றுடன் ஒரு மாத காலமாயிற்று

தாவியோட முயற்சித்த பூனையை 
இறுக்கிக்கொண்டேன் 
இப்பொழுது வாள்வீச்சு 
மிக அருகாமையில்....

சுய மீட்டலில் தீப்பொறியை 
பரிமாற்றியது உள் நரம்புகள்
சூடு தாங்காமல் வெள்ளைப்பூனை 
தாகம் தணிக்க தொடங்கியது 
ருசியறியாது
இப்பொழுது வாள்வீச்சு 
என் உடலெங்கும் 

நான் மறுபடியும் மறுபடியும் வீழ்கிறேன்

18 comments:

அன்புடன் நான் said...

கவிதையில் ஏதோ அனல் வீசுகிறது....அது மட்டுமே உணரப்படுகிறது.... ஆனால் அது என்ன உணர்வு என்று புரிதலில் குழம்பி போயுள்ளேன்....

தோழரின் கவிதைக்குள் ஏதோ இருக்கும் என் மட்டும் நம்புகிறேன்.

இன்னும் கருத்துரைகள் வரட்டும் .... பார்க்கிறேன்.

Raja said...

அமிலம்...வெள்ளைப்பூனை...வாள் வீச்சு...வீழ்தல்...அருமை
வாழ்த்துக்கள்...

பத்மா said...

attagasam vel kannan

திருநாவுக்கரசு பழனிசாமி said...

கொதிநிலை உயரும்போது "சுயம்" வீழ்வது அருமையாய் வெளிப்படுகிறது

A K T said...

மிகவும் அருமையாக உள்ளது. மிக ஆழமாக அவதானிக்க வேண்டியிருக்கிறது. கவிதைக்கு கவிதை செறிவு அதிகமாகிறது. வாழ்த்துக்கள்.

கோநா said...

வேல் கண்ணன் கவிதை அருமை, இதழில் வந்தமைக்கு வாழ்த்துக்கள். தனிமையில், காமத்தில் சிக்கிக் கொண்ட ஒருவன், சுயமீட்டலில் இன்பங்கண்டு வீழ்வதோ? என் அவதானிப்பில் பிழையிருப்பின் மன்னிக்கவும்.

Sugirtha said...

கவிதையின் நுட்பம் அருமை...

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

அரூபமாய்க் கொதித்து எம்மை பொசுக்கி வீழ்த்தும் தாபம் குறித்த வரிகள் அருமை.

Unknown said...

வருகை தாருங்கள்...!
வாசித்துப் பாருங்கள்...!
பங்கு பெறுங்கள்...!!

என்றும் உங்களுக்காக
"நந்தலாலா இணைய இதழ்"

santhanakrishnan said...

நல்லாருக்கு என்று சொல்வது
சம்பிரதாயம்.
ஒரு நல்ல கவிதை என்பது
தனக்குள் ஒரு மர்ம முடிச்சிட்டு
வைத்திருப்பதும், அதற்குள்ளாகவே
அதனை அவிழ்ப்பதற்குமான
நுனியை விட்டு வைத்திருப்பதுமாகும்.
உங்கள் கவிதை ஒரு நல்ல கவிதை.

சிவகுமாரன் said...

கோநா சொல்வது தான் உட்பொருளோ ?
அப்படியிருப்பின் , விரசம் தொடாமல் ஒரு நுண்ணிய உணர்வை அருமையாய் கையாண்டிருக்கிறீர்கள். வியந்து போய் நிற்கிறேன் வேல்கண்ணன்.

மாதவராஜ் said...

நிழற்படத்திலிருந்தும் மல்லிகை வாசம் தருமோ! ரசித்தேன் வேல்கண்ணன்.

உயிரோடை said...

அகநாழிகையிலேயிலும் வாசித்தேன். வாழ்த்துகள்.

இன்றைய கவிதை said...

வீழ்தலும் மீள்தலும் மீண்டும் வீழ்தலுமே இவ்வுணர்வல்லவா (நான் சரியாக புரிந்து கொண்டிருக்கிறேனா?)

இல்லையென்றாலும் அழகாய் அனலாய் இருக்கிறது கவிதை

நன்றி வேல்கண்ணண்

ஜேகே

கா.வீரா said...

பிடித்திருக்கிறது

நேரமிருந்தால் என் வலைப்பக்கம் வாருங்கள்.
கா.வீரா
www.kavithaipoonka.blogspot.com

rvelkannan said...

நன்றி தோழர் சி. கருணாகரசு உங்களின் வருகைக்கும் நம்பிக்கைக்கும்
(அனேகமா புரிந்து கொண்டிருப்பிர்கள் என்று நம்புகிறேன்)

நன்றி ராஜா வருகைக்கும் கருத்திற்கும்

நன்றி பத்மா

நன்றி திருநாவுக்கரசு பழனிசாமி

நன்றி நண்பர் A K T என்னை 'எல்லாவிதத்திலும்' நண்பராக ஏற்றுக்கொண்டமைக்கு...

rvelkannan said...

நன்றி நண்பரே கோநா - உங்களின் புரிதலுக்கும் வருகைக்கும்.
(ஒருவன் அல்ல ஒருத்தி இளம் விதவையின் முதிர் காமம் )

நன்றி சுகிர்தா

நன்றி நண்பர் கனவுகளின் காதலன்

நன்றி நந்தலாலா

நன்றி நண்பர் சந்தனக்கிருஷ்ணன்
உங்களால் பெரும் ஊக்கம் பெறுகிறேன். நன்றி

நன்றி நண்பர் சிவகுமாரன்
(அதுவே தான். நண்பர் கோநா விற்கு சொல்லபட்டதையும் படித்திர்கள் தானே .. நன்றி )

rvelkannan said...

தோழர் மாதவராஜ் நன்றியும் அன்பும் வணக்கமும்
உங்களின் வருகையாலும் பதிவினாலும் பெரு மகிழ்வு கொள்கிறேன்

நன்றி உயிரோடை

நன்றி ஜே.கே
(மிக சரிதான் நீங்கள் சொன்னது, கருத்துரைக்கு மிகுந்த நன்றி )

நன்றி கா.வீரா
கண்டிப்பாக வருகை தருகிறேன்