ஆதியும் அந்தமும்



அடர் வனமொன்றில் 
புதைந்திருக்கும் 
உன் மெளனத்தின் 
சொற்களுடன் எழுகிறது 
ஒரு பறவை ஒரு மிருகம் 

பெருமழையொன்றில்
குளிர்ந்திருக்கும் 
உன் பார்வையின் 
ஆழங்களுடன் விழுகிறது 
ஒரு ஆலங்கட்டி ஒரு பாறை 

மென்கொலுசொலியில் 
ஒளிர்ந்திருக்கும் 
உன் புன்னகையின் நெளிவுகளுடன் சுரக்கிறது 
ஒரு துளி பால் ஒரு துளி விஷம்

மீளா துயரத்தில்
மீட்டியவாறேயிருக்கும்
உன் சுவாசத்தின் 
ராகங்களுடன் துளிர்க்கிறது 
ஒரு வாழ்வு ஒரு மரணம்

11 comments:

ராமலக்ஷ்மி said...

நன்று. விகடனில் வாசித்தேன். வாழ்த்துக்கள்!

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

இரு துருவங்களின் இடையில்தான் பெண்மை உயிர்க்கிறதோ வேல்கண்ணன்? அருமை அந்த இடைவெளிகள் உண்டாக்கிய கவிதை.

Unknown said...

அருமை பாஸ்!

பா.ராஜாராம் said...

superb velkannaa!

தமிழ்வாசி பிரகாஷ் said...

பகிர்வுக்கு நன்றி நண்பரே

சத்ரியன் said...

வேல் கண்ணனிடமிருந்து
இவ்வளவு எளிமையான சொற்கள்!!!

ஓவியம் போல கவிதையும், கவிதையைப் போல் ஓவியமும் அருமை.

Ashok D said...

நீங்க அமலா பாலைப் பற்றி தானே சொல்லுகிறீர்கள் :)

rvelkannan said...

நன்றி ராமலக்ஷ்மி
நன்றி சுந்தர் ஜி
(இருக்கலாம் தானே ஜி)
நன்றி ஜி
நன்றி அண்ணே!
நன்றி பிரகாஷ்
நன்றி சத்ரியன்
(காதல் படுத்தும் பாடு...!)
நன்றி அசோக்
(அவரவர் காதலிகள்(!?) நினைவிற்கு வருவது இயல்பு தானே அசோக் )

அம்பாளடியாள் said...

அருமையான கவிதை வாழ்த்துக்கள் சகோ
மென்மேலும் தரமான கவிதைகள் படைக்க....

Anonymous said...

unga blog romba nalla iruku

Life is beautiful, the way it is...
90 ரூபாய் பூஸ்டர் பேக் போடுங்க 30 நாட்களுக்கு நான் ஸ்டாப் ஆ பேசுங்க மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் பண்ணுங்க 365 Days Free Unlimited Calls Click Here

a s murthy said...

nilaiyana penne perazhage... kalaiyana mugam tharum sugam... azhugaiyil thuyaril vizhugaiyil...nijam yuga kudathil vizhundha...thuli visham... good attempt.