இசைக்காத இசைக்குறிப்பு



என்னை
அகழ்தெடுக்கும் உன் விழிகளில்
இருந்து தான் பிரித்தெடுத்தேன்
உயிர் கவ்வும் ஒரு சொல்லை.

அச்சொல்லை விதைத்து
முளைத்தெடுத்த நொடியில்தான்
தோன்றிமறைகிறது கோடிமின்னல்.

அச்சொல்
மலையருவி தோன்றும் கணத்திலும்
முன்பனி வீசும் முதல் பொழுதுகளிலும்
காலப்புழுதியில் உறைந்திருக்கும் ரகசியங்களிலும்
படிந்திருக்கிறது.

அச்சொல்:
பாதளக்கரண்டியிலும் அகப்படாத
கிணற்றாழங்களில் கசியும் துளை.
சுகிக்காத ஆழ்கடலின் ஏதோ ஒன்று.
அப்பாலுக்கு அப்பாலும் மினுக்கும் விண்மீன்.
முலைக்காம்பில் திரண்டு நிற்கும் வியர்வைத்துளி.
மாமழையையே அள்ளிப் பருகிய பின்னும்
அடங்காத தாகம்.
மரணத்திற்கு இறைஞ்சி நிற்கும் சிரஞ்சீவி.
தனிச்சொர்க்கத்தை உதறித்தள்ளும் திரிசங்கு.
நிரம்பிக் கொள்ளாத கவிதை
ஆகவும்.


நன்றி : மலைகள்.காம்.
நன்றி ஓவியம் சிவகுமார்

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இதுவும் கடந்து போகும்...

நிலாமகள் said...

மாமழையையே அள்ளிப் பருகிய பின்னும்
அடங்காத தாகம்.
மரணத்திற்கு இறைஞ்சி நிற்கும் சிரஞ்சீவி.
தனிச்சொர்க்கத்தை உதறித்தள்ளும் திரிசங்கு.//

சொல்லின் வீரியம் சுட்டெரிப்பதாய் ...