மன்னவளே
கதவை திறந்தேன்
வாசலில் நீ
உள்ளிழுத்து தாழ் இட்டுக் கொள்கிறாய்


குறைந்த வெளிச்சம்
நிறைந்த இருள்
அறையின் நீள சதுரங்களை நிர்ணயக்கிறது
உன் முகஒளி

உன் தோள் சாய்ந்த போது சேயானேன்
நீ சாய்ந்த போது மலையானேன்

உன் பார்வை தீண்டலில்
கோடைக்காலம் குளிர்க் காடானது
கான்கிரீட் நகரம் நந்தவனமானது
வயது மறந்து தாயின் கருவறைக்குள் இருந்தேன்

இந்த மாலை கொள்ளாமல் 
தவழும் தென்றலை
நம்மிடையே நுழையாமல்
பின்னிக்கொண்டவளே

No comments: