அவள்


அழகியப் பூ வேலைப்பாடு கொண்ட அந்த கித்தானை 
பல மணி நேரமானாலும் பார்த்துக் கொண்டிருப்பாள்
அவள் விரும்பியதை விட வெறுத்தது அதிகம்
இரண்டு நிமிட பேச்சில் நான்கு முறை 'பிடிக்கலை'யை சொல்லிவிடுவாள்
உதட்டை தன்னிச்சையாக ஈரப்படுத்திக் கொள்வதாய் இருக்கும் அந்த சொல்
கடல் நுழையும் சூரியனையும் ஆரஞ்சு நிறத்தையும் 
அவள் தவிர்ப்பதில்லை
அவளுக்கு வலதை விட இடது முலை சிறியது
இடம் தொடுகையில் அதிக உணர்ச்சி வசப்படுவாள்
என்னைத் தவிர்த்து எல்லோரிடமும் சொல்லித் திரிகிறாள்
'அவனைப் பிடிக்கலை'

No comments: