நவீன கோமாளி


கட்டமைக்கப்பட்ட மொழி
கசிந்தறுந்து விழுகிறது சில சொற்கள் 
முன்னும் பின்னும் சிதறி நின்ற சொற்கள் தாமாகவே
சமைந்து கொண்டன அர்த்தங்களின் வரிசை
வரிசையாக அடுக்கப்பட்ட சீட்டுக் கட்டிலிருந்து
சரிகிறார்கள் ஒரு ராணியும்  சில மந்திரிகளும்

ராணியுடன்  புணர்ந்த மந்திரிகள்
குழி தோண்டி தன்னைப் புதைத்துக் கொண்டார்கள்
ராணி புணர்ந்த மந்திரிகள்
பைத்தியமாக அலைகிறார்கள் தெருவெங்கும்
நகரம் வலியை சுமக்கிறது

தெரு மூலையில் நவீன கோமாளி
கவிதை வாசிக்கிறான் இசைக்கிறான் நடனமிடுகிறான்

No comments: