விடமேறிய யுகத்தனிமைவெறுத்து ஒதுக்கிய நிகழ்வுகளை
சலிப்பு ஊர்ந்த பொழுதுகளில்
நினைவுபடுத்தியபடியே
எழுத்துரு
சரமொன்றை தொடுத்து
உன் நீள்விரல்களுக்கு
சேர்ப்பிக்க திருக்கோயில்
வந்து சேர்ந்தேன்
நிம்மி

குளத்து மேற்பரப்பில்
தகதகக்கும் மீன்கள்
விளக்குகள் இருள் குடித்தன
எஞ்சியதை மொய்க்கும்
மினுக்கட்டாம் பூச்சிகள்
ஒளிச்சிடுக்கும் விண்மீன்கள்
பார்வையற்றவனின் பாடல் இனி
ஒலிக்கப் போவதில்லை
ஆருடம் கதைத்தபடியே  
கிங்கிணி கதவுகள் தாழிடப்பட்டன

தொடுத்த சரத்துடன் நானும்
என்றைக்குமான யுகத்தனிமையும்
விடமேறத் தொடங்கினோம்

No comments: