பதிவு செய்பவர்கள் கவனத்திற்கு


இசைஞனை இசைக்கருவியுடன்
ஓவியனை வண்ணங்களுடன்
சிற்பியை செதுக்கும் ஒலியுடன்
நடனக் கலைஞனை அபிநய முத்திரையுடன் பதிவு செய்யுங்கள்

இரவை மாறா அன்புடன்
பகலை அலையும் பசியுடன்
பதிவு செய்ய முயலுங்கள்

கவிஞனை தலைகவிழ்தலுடன் 
மட்டுமே
பதிவு செய்யுங்கள்
காரணம் தேடும் கேள்விகளை
அவரவர்களே கேட்டுக் கொள்ளட்டும்