யாரையும் குறிப்பிடுவன அல்லஎஜமானுக்கு பறவைக் கூண்டுகள் பிடிக்கும்
விதவிதமான கூண்டுகள் வைத்திருந்தார்
ஆம், நீங்கள் நினைப்பது சரிதான்
எல்லாமே உயர்ரக கூண்டுகள்
செல்லும் இடம் எங்கும் கூண்டுகளை எடுத்துச் சென்றார்
ம்.. இப்பவும் நீங்க சரியாகத்தான் கணிச்சு இருக்கீங்க
அவரிடமும் கேட்கப்பட்டது
அவர் பறவைகளைத்  தேடத் தொடங்கினார்
அவருக்கு தெரியும் கிளிகள் மட்டுமே 
கூண்டுகளை அலங்கரிக்கப்பவை
பாதகம் விளைவிக்காதவை

இவர் கண்களுக்கு கிளியென தெரிந்தவைகளை அடைத்துப் பார்த்தார்
பருந்துகள் கூண்டை உடைத்தன
குயில்கள் கூண்டின் கிராதிகளுக்கு இடையில் வெளியேறின
(மயில்களை அடைக்க முடியவில்லை,குறிப்பாக பெண் மயில்கள்)
களைப்படைந்திடவில்லை எஜமான்
விடலைக் குஞ்சுகளாக சிக்கின கிளிகள்
அறுசுவை உணவுகள் அளிக்கப்பட்டன
அவ்வளவு அழகாகப் பொருந்தின கூண்டுகிளிகள்
அவர் பாட கிளிகள் பாடின
அவர் அருந்த கிளிகள் அருந்தின
அவர் பேச கிளிகள் பேசின
அவர் வலம் வந்து இடம் மறுக்க 
கிளிகளும் செய்தன
நாள்பட பண்பட்டன கிளிகள்
அவர் நினைப்பதைப் பேசின கிளிகள்
எஜமான்கள் முதலான பிரபலங்கள்
சமூக வலைத் தளங்களில் உலாவுவதில்லை
கிளிகள் சத்தம் காதை அடைக்கிறது

No comments: