மெலிந்த காற்றில்
மிச்ச இலைகளும் கொஞ்சம் புல்லும்
பாடத் தொடங்கின கேள்.

நதி ஓடிய நிலத்தில் ஆழஆழமாய்
ஈரம் கசிந்தது காண்.
அக்கணமே, மலை உச்சி சேர்ந்த முத்தம் காண்
அம்மலை கண நேரத்தில் அசைந்ததும்  காண். 

ஓவியம் : மிச்சல் துஜர்தின்
நன்றி : ஜீவ. கரிகாலன்

No comments: