விளை நிலங்களில் நடப்படும் மனை எண் பலகை

நிலா வட்டமாகத் தெரிகிறது கடல் அலை ஆர்ப்பரிக்கிறது மலை உயர்ந்து நிற்கிறது காற்று வனத்தை அசைக்கிறது தீவாய் நின்று பார்த்துக் கொண்டிருக்கிறேன். கனிகள் புளிக்கின்றன நிழல் வெக்கை அடிக்கிறது பசி கள்ளக் காதல் செய்கிறது காமம் தற்கொலை செய்கிறது வெறுமனே நின்று பார்த்துக் கொண்டிருக்கிறேன். கல்விக்கூடங்களில் ஆயுதங்கள் தயாராகின்றன மலையின் முலைகளில் குருதி வழிகிறது ஆற்றுப்படுகை விரிப்புகள் தலையணையாகிறது விளை நிலங்களில் நடப்படுகிறது மனை எண்பலகை நின்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

நன்றி : தை கவிதையிதழ் , வே.ராமசாமி
நன்றி : நா. கோகிலன்

No comments: