கடைசி விருந்துதட்டில் பகிரப்பட்டியிருக்கும் உணவு
அருகில் இருக்கும் மது
இந்த மேசை
இந்த அறை
இவ்வுணவைப் பகிர்ந்த 
நண்பன் உட்பட அனைத்தையும்
மிக மோசமாக வெறுக்கிறேன்
கடுஞ்சொற்களால் வசை மொழிகிறேன்
இந்த உணவில் பெயர் எழுதப்பட்டு இருந்தால்
உடனே அதனை அழிக்க துடிக்கிறேன்

இன்று 
உலாவும் நிலத்தில் துளி வியர்வை சிந்தவில்லை
கிடைத்த புத்தகத்தில் ஒரு சொல்லைக் கூடப் படிக்கவில்லை
அந்த ஓவியத்தின் மஞ்சள் குழைவை ரசிக்கவில்லை
எதிரில் பக்கத்தில் அமர்ந்திருப்பவர்கள்
இதில் ஒன்றை செய்தவர்  ஆகிறார்கள் 
என்பதாலும்
இன்றைய நாளை 
கொடூர முறையில் கொன்றவனாகிறேன்

எனதிந்த கடைசி விருந்தினை சுகிக்காமல்... 
எனதிந்த இரவினை உறங்காமல்...

2 comments:

சு.மு.அகமது said...

"எதிரில் பக்கத்தில் அமர்ந்திருப்பவர்கள்
இதில் ஒன்றை செய்தவர் ஆகிறார்கள்
என்பதாலும்
இன்றைய நாளை
கொடூர முறையில் கொன்றவனாகிறேன்"

அருமை வேல்கண்ணண்.வாழ்த்துக.

vel kannan said...

நன்றியும் அன்பும் சு.மு.அகமது அவர்களே..