வெயிலான வெயில்

வெயிலான வெயில்
விரைந்தோடி வருகிறது
நிதானமாகவே வெளியேறுகிறது
தனித்தும் காய்கிறது


நிலமெங்கும்
கரிக்கும் உப்பைக் காய்ச்சுகிறது
வானம் கொள்ளாமல்
கடல் கொள்ளாமல்
இரவையும் ஆட்கொள்கிறது

உயிர்களின்  
வியர்வைக் குருதியில்
தாகம் தீர்த்துக் கொள்கிறது

நமக்கிடையேயான
பொதுவுடைமை வளர்க்கும் மழலையாகிறது

வெயில்
வெயிலான வெயில் ஆனதைப் பற்றி
மரமற்ற தூரத்தில் பறவையொன்று 
பாடிக் கொண்டிருக்கிறது

No comments: