அகக் கட்டுப்பாட்டுக்குள் புறத்தே பறக்கும் பட்டம்


(பாலைவன லாந்தரின் "உப்பு வயலெங்கிலும் கல்மீன்கள்" கவிதை தொகுப்பு குறித்து என் பார்வை)


தூரத்தில் கேட்கும் பறவையின் பாடல் போன்று பிறந்த குழந்தையின் அழுகை போன்று மழையின் சப்தங்கள் போன்று அருவியின் சங்கீதம் போன்று உங்களுக்கு பிடித்தவரின் உங்களுக்காக சிந்தும் புன்னகை போன்று எதிர்பாரா நேரத்தில் உங்கள் முன் தோன்றும் கடவுளை போன்று அல்லது சாத்தனை போன்று ஒரு சிலிர்ப்பாகஏகாந்தமாகனந்தமாக  கவிதை இருக்க வேண்டும்என்றால்....
புத்த விகாரங்கள் நொறுங்கி விழும் ஓசைமிக அருகில் இனஉறவுகள் ருந்தும் கைவிடப்பட்ட நிலத்தில் முள்வேலிக்குள் அடங்கி போகும் வலகுரல்தன் வாரிசின் பிளக்கப்பட்ட தலையுடன் கையிலேந்தி நிற்கும் அந்த தந்தையின் அழுகுரல் இளவரசனின் அலறலை கடத்தி செல்லும் ரயிலோசை இன்றளவும் ஏதேனும் ஓரிடத்தில் வல்லுறுவுக்கு இரையாக்கப்பட்டு கொண்டிருக்கும் பெண்ணின் டைசி கேவல்அரசர்ஆங்கிலேயர், அரசியல்வாதி ,அதிகாரிகள் என்று அதிகாரங்களின்கொக்கலிப்புகள் வைகளை என்ன சொல்வீர்கள்இதனை திர் நோக்கும் உங்களின் மனக்குரலை நீங்கள் கேட்டு இருக்கீர்களாஇவ்விதமான குரலையும் கவிதை என்றால் மறுப்பு சொல்விர்களா..
பாலைவன லாந்தரின் ‘உப்பு வயலெங்கிலும் கல்மீன்கள்’ இப்படியான அவலத்தைகேவலத்தையும் வன்மத்தின் கழிவிரக்கத்தை தனிமையின் ஆற்றாமையை பொதுவின் அதிகாரத்தை கேள்வி கேட்க/காட்சிப்படுத்த அவசர வசரமாய் முயற்சித்து இருக்கிறார். (இங்கே இன்னும் ஒன்றையும்சொல்லிக்கொள்ள விருப்பபடுகிறேன், 'பாலைவன லாந்தர்" என்கிற இந்த பெயர் குறித்து எனக்கு சிலகேள்விகள் இருக்கிறது இதனை பின்பு கேட்கிறேன்.)
 பெரு நகரங்களில் மட்டுமே சாத்தியமான பல்நோக்கு வணிக வளாகம்  இப்பொழுதுT.கல்லுபட்டியிலும் நிகழத் தொடங்கி விட்டதுநம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அதிவிரைவாகமாறும் உலகமிது நேற்று பார்த்த ஒன்றை உள்வாங்குவதற்குள் இன்று வேறு ஒன்றாகமாறிபோனதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ‘’அந்த காலத்துல.. என்பது அந்த காலத்துல குறைந்த பட்சம் 25- வருடத்திற்கு குறையாமல் இருந்ததுஇன்று அது குறைந்து குறைந்து 25நாட்களாக மாறி விட்டதுஇதனை பதிவு செய்ய நினைபவர்கள் அவசர அவசரமாய் குறிப்பெடுக்கவேண்டி இருக்கிறதுகண நேரத்தில் தோன்றி மறையும் அவைகளுக்கு பெயிரிடும் பொறுப்பையும் உணரும் போது மார்க்வெஸின் மக்காந்தோ நினைவிற்கு வருகிறது.இங்கே பாலைவன லாந்தரும்இதை போகிற போக்கில் அவசர அவசரமாக குறிப்பெடுக்கிறார்.
தீபாவளி மலர் மற்றும் வார இதழ்களில் கொடுக்கப்பட்ட இலவச இணைப்புகளில் இருந்து ஜியோ ஜிம்வரை ந்த உலகத்தில் எல்லாவற்றுக்கும் விலை உண்டு.  எல்லா வற்றுக்கும் என்றால் ஆம்,எல்லாவற்றுக்கும் தான்எதிர்ப்பதும் கண்டிப்பதும் கூட இங்கே வணிகமயமாகி போனதின்காரணம் உலகமயமாக்கலின் பின் விளைவு என்று போகிற
போக்கில் சொல்லி விட்டு போகும் விலை’ என்னும் இந்த கவிதையை முக்கியமான கவிதையாக நான் பார்க்கிறேன்
விலை
 ஒரு மாத்திரை 
கொஞ்சம் விஷம் 
ஏதோ ஒரு விலங்கின் கழிவு 
இறந்த பிண்டங்களின் அழுகல் 
துர்நாற்றமடிக்கு தண்ணீர் 
விலை ஐம்பது பைசா 

ஒரு பரோட்டா 
வேதிப்பொருட்களின் கழிவு 
அயல்நாட்டிலிருந்து தூக்கிஎறியப்பட்ட 
இரண்டாம் தரம் பூச்சி மருந்துகளின் மரவள்ளிகிழங்குகள்
கலப்பட எண்ணெயின் தீக்குழி 
விலை ஐந்து ரூபாய் 

பேர் அண்ட் லவ்லி 
ஏழு நாட்களில் பருக்கள் மறையும் 
ஏழு வாரங்களில் பெட்ரோமாக்ஸ் எரியும் 
இல்லையென்றால் பணம் வாபஸ் 
வாபஸ்வாங்கவேண்டிய முகவரி 
காந்தக் கோடுகளில் உள்ளது 
விலை நாற்பத்தியேழு ரூபாய்

தியான மடம்
ஒரு முறை இந்த அமைதியை 
அனுபவித்து பாருங்கள் 
மனம் உடல் இறகு போல இலேசாகும் 
வாழ்வு வானம் வசப்படும் 
புத்துணர்வு எழும் 
அனுமதி ஒரு இலட்சம் மட்டுமே 
வெள்ளைக்காரனுக்கு முன்னுரிமை 

குவார்ட்டர் 
எங்கேயும் எப்போதும் கிடைக்கும் 
சந்தோஷமா துக்கமா இங்கே வாங்க 
தெருக்கோடியில் வீழ்ந்து கிடப்பவனை 
நட்சத்திர விடுதியில் மதுவருந்தியவன் 
ச்சீ குடிகார நாய் என்று சொல்வான் 
வெறும் நானூறு ரூபாய்
----------------- 
இதிலிந்து தெரிந்துக் கொள்ள வேண்டியதுஇந்த விலையை யார் / எதன் பொருட்டு நிர்ணயம்செய்கிறார்கள் என்பதே...
 அடுத்ததாகதற்போது நவீன கவிதையில் எழுதுபவர்கள் கண்டிப்பாக கரத்தை நகரம்சார்  வாழ்வைசூழலை பதிவு செய்து விடுகிறார்கள்அப்படியான கவிதை :

இறுதிக்காற்று
-------------------  
 பின்னங்கால் பிடரியடிக்க ஓடிவருகிறான் 
இருதயத்துடிப்பு எகிர எகிர 

வாயிற்படியில் வாய்பிளந்து 
சாய்ந்து கிடக்கிறாள் கிழவி 
அவளது தொண்டைக் குழியில் 
விரல் வைத்து அழுத்துகிறான் 
சினத்துடன் வெளிவருகிறது 
ஏழெட்டு கருந்தேள்கள் 

உத்தரத்தில் தொங்குகிறாள் மனாளி
அந்தச் சீலையை 
முகர்ந்து முகர்ந்து பார்க்கிறான் 
வேற்று உயிரணுக்களின் வாசனை
கிடைக்கிறதா என 

கோரைப்பாயில் குப்புற கிடக்கும் 
ஆறுமாத மகனின் புட்டங்களின் வழியாக 
இறுதிக்காற்று பிரிந்து செல்வதை 
அவன் பொருட்படுத்தவில்லை 

கருகும் புனிதநூல்களின் வாடை 
தேயும் மந்திரங்கள் 
தூரத்து முத்தங்கள் 
மூச்சிரைக்கும் வளர்ப்பு பிராணி 
கொல்லையில் அலங்கோலமாக 
வயிற்றில் அம்மிக்குழவி நசுங்கி 
தொண்ணூறு சதவீதம உயிரற்று கிடக்கும் 
மகளை இடக்காலால் ஒதுக்கிவிட்டு 
மிச்ச அரளிவிதைகளை விழுங்குகிறான் 
இப்போதெல்லாம் இந்த கனவிற்கு 
இவன் பதட்டப்படுவதில்லை 
வெகு சாவகாசமாக 
பறக்கும் முத்தங்களை வழங்கி 
இருசக்கர வாகனத்தை உதைக்கும் 
வெகுசனவாதி ஆகியிருந்தான் .

இந்த கவிதை இந்த நவீன காலகட்டத்தில் எந்த விதத்திலும் மறுக்க முடியாத கவிதையாக எனக்கு தோன்றுகிறதுஇதனை ICU வார்டுக்கு வெளியே நின்று Candy Crush விளையாடும் மகாபுண்ணியவான்களுக்கும்  தண்ணீர்க்கு பதிலாக நெருப்பை கொட்டி குளிபாட்டிய பேருந்தின் முன் செல்பிஎடுத்துக் கொள்பவர்களுக்கும் சமர்பிக்கலாம்.
எந்த காரணம் கொண்டும் யுத்தம் வேண்டாம் என்று பல்வேறு முறையாக சொல்லப்பட்டு வருவதில் யுத்தங்களை அவ்வண்ணமே காட்சி படுத்துவது ஒரு முறைஅப்படியான யுத்தத்தின் காட்சிபடுத்தலை மிகச்சரியாக செய்து  இருக்கிறார்.

ஈனத் தீ
--------------
 கனத்த மௌனத்தைப் பாழ்படுத்த 
எங்கேனும் ஒரு குண்டு வெடிக்கிறது 
அந்தப் பகுதியின் அடர்ந்த இருளை கிழித்து 
நெருப்புப் பிழம்புகளை சரமாரியாகத் தெளிக்கிறது 

உறங்கிக்கொண்டிருந்த சிலர் அப்படியே 
உருக்குலைந்து மரணித்து விடுகின்றனர் 
குற்றுயிரும் குலையுயிருமாக அலறும் குரல்களுக்கு 
நெருப்பினை விட நீளமான நாக்குகள் 

எரிந்துக் கிடக்கும் புனித நூலின் பாதி 
மூக்குக் கண்ணாடியில் உடைந்த துண்டுகள் 
உருகி வடிந்துக்கொண்டிருக்கும் நெகிழி மேஜை மற்றும் இருக்கைகள் 
கருகிய ரொட்டித்துண்டுகளைப் போலுள்ள வீடுகள் 
முழுமையாக சாம்பலாக்கத் தவறிய னத் தீ 

யாருக்கோ சேரவேண்டிய குறுஞ்செய்தி 
சிவப்பு விரல்களுடன் அழுத்தத்திற்காக காத்திருக்கிறது 
வாட்ச்மேனின் துண்டுக் காலினடியில்
முதலாளியின் மண்டை ஓடு 
எலும்பு மஜ்ஜை சதை நரம்புகள் மற்றும் இன்னபிறவை
நாசியில் நீலத்துண்டு அணிந்த பரிசோதனையாளன்
கிரானைட் தளத்தில் உடைந்த மீன் தொட்டியிலிருந்து 
இறந்த மீன் குஞ்சுகளை முறத்தில் சேகரிப்பது போல சேகரிக்கிறான் 

வேடிக்கை பார்க்கும் கூட்டத்திலிருந்து 
ஆயிரத்தெட்டு கேள்விகள் குறைப்பிரசவமாகிறது 
சிலர் சுயப்புகைப்படம் எடுக்கின்றனர் 
சிலர் கொண்டை மைக்குகளில் கதை சொல்கின்றனர் 

மூன்றாம் நாள் காலையில் 
மரணித்தவர்களின் புகைப்படத்திற்கு முன்
மீச்சிறு நெருப்பை ஏற்றிவைக்கிறார்கள் 
அதன் ஒளியில் 
புகைப்பட விழிகள் மேலும் அச்சம் கொள்கின்றன .
 --------------------
ஈழத்தில் யுத்தம் நடக்கும் போது தப்பி பிழைத்து இங்கே  வந்தவர்கள்ஒவ்வொரு வானுர்தி கடக்கும்போதெல்லாம் அவர்தம் உடல் மொழியை நாம் அறிந்தவர் தானே?

ஒரு கவிதையின் முதல் வரி கடைசி வரியுடன் இணைக்க வேண்டும் அதே மயத்தில் எதிர் மனநிலையை கவிதையின் இறுதி வரி செய்தே ஆக வேண்டும் என்பது ஒரு காலத்தில் சொல்லப்படாத விதியாகவே இருந்துஅதிலிருந்து தற்கால கவிதைகள் விலகி வருவது ஆறுதல்ஆனால் அப்படியான வகைமையில் தொகுப்பில் இடம் பெற்ற ‘மேய்ப்பவன்’ கவிதையை வைத்ததாலும்சொல்ல வந்ததை இன்னும் தெளிவாக சொல்லி இருக்கலாமோ என்று தோன்றுகிறது. ‘உங்கள்யுத்தத்தில் எனக்கு வேலை கொடுங்கள்‘ என்று தொடங்கும் கவிதை மேய்ப்பவனுக்கும் யுத்ததுக்கும்எதனை கொண்டு இணைக்கிறார்  ன்று தெரியவில்லை? ‘மொழி இடக்கு செய்யும்’ என்பது இதுதானோ?

மேய்ப்பான்
-------------------------
உங்கள் யுத்தத்தில் எனக்கு வேலை கொடுங்கள்
எனது திறமையை சற்றும் கீழாக மதிப்பிட வேண்டாம்
ஆயுதங்கள் பாதுகாக்கும் பணியைத் தராதீர்கள்
சுயபரீட்சை செய்யும் பழக்கம் எனக்குண்டு

வீரர்களுக்கு உணவு சமைக்கும் பணியைத் தராதீர்கள்
அன்னையைப் போன்று உப்பும் உரப்பும் விகிதமாகக் கலக்கத் தெரியாது
குதிரைகளை யானைகளை பழக்கும் பணியைத் தராதீர்கள்
எனக்கு உணர்வு மொழிகள் அவ்வளவு தெரியாது

தலைமை வகிக்க பணிக்காதீர்கள் சகிப்புத்தன்மை அறவே கிடையாது
இதையெல்லாம் கற்றுக் கொள்ளும் முன்னமே யுத்தம் சமீபித்து விடலாம்

ஆதலால் எனக்கு மேய்ப்பன் வேலை கொடுங்கள்
இரண்டு ஆட்டுக்குட்டிகளை தடவிக் கொடுத்து அமைதியாக
வேடிக்கை பார்க்கும் மேய்ப்பன் வேலை கொடுங்கள்
-----------------
இதோ போல தொகுப்பில் சில கவிதைகளிலும்பல கவிதைகளில் சில வரிகளிலும் ஒரு  வித பதட்டம் தெரிகிறது (உம்காரல் மார்க்ஸின் காட்சிப்பிழைடெனிம் புளு ஜீன்ஸை கடவுள் எதற்கா படைத்தான்சவப்பெட்டிகளின் நாற்புற ஆணிகள்ஆப்பிளின் விதை  புற்றுநோயின் மூலக்கூறாக)இதனை,முதல் முறையாக கொட்டிய வெளிச்சத்தில் கேமரா முன்னாடி நின்றவர் போன்ற பாவனையை 'பாலைவன லாந்தர்' 

இந்த தொகுப்பில் அநேக கவிதைகள் அகத்தில் இருந்தே புறத்தில் இருப்பவற்றை சுட்டுகிறது மற்றும்சூழல வைக்கிறதுஇதை இப்படி சொல்லலாம் படபடத்து காற்றில் உயர பறந்து அலைவுறும் பட்டம்ஒன்றின் நூல்முனைவிரல் நுனியில் சுண்டப்படுவது போல் கவிதையில் இயங்கும்புறத்தை சுழற்றவும் உயர எழுப்பவும்அகம் தன் கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கிறது

நான் முன்பு சொன்ன மாதிரி பெயர் குறித்து சந்தேகத்திற்கு இப்பொழுது வருகிறேன்:

இணையத்தில் இவரின் கவிதைகள் காணக் கிடைக்கும் போது இந்த பெயரை பார்த்து ஏதோஒரு ஃபேக் ஐடி என்று கடந்து சென்று இருக்கிறேன்70-80 கள் வரை இப்படி புனைபெயரில்எழுதுவதற்கான சரியோ தவறோ ஒரு காரணம் இருந்ததுஅதே காலகட்டத்தில் அதைமீறியவர்களும் உண்டு.. இன்றளவும் அது இருக்கிறதா.. அல்லது இந்த சமூக அமைப்பு பெண்என்பதாலேயே கட்டுப்பட்டு வைத்துக்கொள்கிறதாஇதனை தனது இயற்பெயரை பதிப்பதின்மூலமாகவே எதிர்த்து விட முடியாது என்றாலும் அதுவும் ஒரு விதமான எதிர்ப்பேஅதே சமயத்தில்கல்பனாசுகந்தி சுப்ரமணியம்குட்டி ரேவதிசல்மா,சுகிர்தராணிமாலதி மைத்ரிலீனாமணிமேகலை இவர்களில் ஆரம்பித்து இன்றும் எழுதியும் இயங்கியும்  கொண்டிருக்கும் எழுத்தாளர் கவின்மலர்,சந்திராதமயந்திநாச்சியாள் சுகந்திகவிதா முரளிதரன் பரமேஸ்வரிஉமாமோகன்,ஜெயராணிலிவிங் ஸ்மைல் வித்யாநறுமுகை தேவி(இப்பொழுது நினைவில் தோன்றுபவர்களை)  மற்றும் பலரும் தனக்கு வந்தஎதிர்ப்புகளை நேர்கொண்டும் முடிந்த வரையில் அதனையும் பதிவு செய்தும் இருக்கிறார்கள்என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை ஒரு தகவலாக சொல்லிக் கொள்ளவிரும்புகிறேன்.

இறுதியாகஅறிமுக கூட்டம் என்பதால் தொகுப்பு குறித்து எனக்கு தோன்றிய விமர்சனங்களை ஒருபத்தியில் முடித்துக் கொள்கிறேன்.

மொழிக்கும் உணர்வுக்கும் இடையில் நிலவும் மெளனம்/சொல்லாடல் இவற்றைஅப்படியே கவிதைகளாக மாற்ற முடியுமா என்று கேட்பதை விட மாற்ற வேண்டுமா என்றுசுயபரிசோதனை செய்து கொள்ளவது கவிதைக்கு நன்று. கவிதைக்கான வார்த்தைகள் வாக்கியங்கள்நமக்கு எங்கிருந்து வேண்டுமானாலும் கிடைக்கலாம்.ஒடு நடை பயணத்தின் போது அல்லது ஒருநீண் நெடிய பயணத்தின் முடிவில், ஒரு நல்லிசையை கேட்ட போது கடற்கரை இளைப்பாறலின் போது அல்லது ஒரு கனவின்போதுயூமா வாசுகி கவிதைகளிலிருந்து அல்லது பிரான்ஸிஸ் கிருபா கவிதைகளிலிருந்து, மனுஷ்யபுத்திரன் கவிதைகளிலிருந்து அல்லது கவிதைக்காரன் இளங்கோவிடமிருந்து அல்லது வலசை நேசமித்திரனிலிருந்து பெறலாம்இதுபெரும் பிழையும் அன்றுஇங்கே எந்த வார்த்தைகளுக்கும் யாரும் சொந்த கொண்டாட முடியாது.ஆனால் அதனை ரு முறையாக ஒரு  வடிவத்திற்கு  கொண்டு வருவதும் அதனை நேர்படுத்தவும்ஏற்ற மனநிலைக்கும் குறிப்பாக அதற்குரிய காலத்திற்கும் ஒரு  கவிஞர் காத்திருந்தே ஆகவேண்டும்.இதனை வரம்/சாபம் என்று எப்படி சொல்லிக் கொண்டாலும் சரிதன் மூலம் வருடத்திற்கு சிலகவிதைகள் எழுதப்பட்டாலும் தவறில்லைகவிதை அவ்வளவு பெரிய ஆகமசக்தி வாய்ந்தது இதனையாரும் மறுக்க போவதில்லை.

தேர்ந்த தையல்காரனுக்கும் அறுவை சிகிச்சைக்கு பின் தைக்கும் மருத்துவ தாதிக்கும் வேறுபாடுஉண்டுகவிதைக்கு ஜோடனையான மிக அழகிய வேலைப்பாடு மட்டும் அல்ல மிகச் சரியாகபொருந்தியும்  போகவேண்டும்சொற்களின் சேர்ப்பில் கவனம் இருக்க வேண்டும்இரு வெவ்வேறுசொற்களின் சேர்ப்பு ஒரு கவிதையை வினோத உருவமாக அமைந்து  பொருந்தி போகாத உடுப்பைஅணிந்து கொண்டு பொது வெளியில் வீறு நடை நடப்பது போன்ற உணர்வை தோற்றிவிக்ககூடும் சிக்கலை கவிஞர் இனி வரும் நாட்களில் தவிர்ப்பர்  என்று நம்புகிறேன் .

கவிஞருக்கு வாழ்த்துகள்

வாய்ப்பு தந்த அனைவருக்கும் எங்களுக்கென நேரம் ஒதுக்கிய உங்களுக்கும் எனது  நன்றியும் அன்பும்.

வேல் கண்ணன்

நன்றி : கவிஞர் பாலைவன லாந்தர், Shruti TV மற்றும் சால்ட் பதிப்பகம், 
-சால்ட் பதிப்பகத்தின் கவிஞர் பாலைவன லாந்தர் எழுதிய "உப்பு வயலெங்கிலும் கல்மீன்கள்" வெளியீட்டு விழாவில் வாசித்த கட்டுரை. காணொளி கீழே இணைப்பில் :)

https://www.youtube.com/watch?v=0_qR516fHoc

No comments: