இரைச்சல் ஓய்ந்த கணத்தின் நிசப்தம்

பிடித்துக்கொள் என்பதாக கொடுத்த முந்தானையாய்
கிளைமேவிய ஜன்னலிருந்து கேட்ட
பறவையின் பாடல் என்னை எழுப்பியது.
இன்றைக்கு அதீத பதட்டத்துடன் ஒலித்ததாய் தோன்றியது
இரவு தீங்கனவு கடந்திருந்தேன்.
இன்னும் சில நிமிடங்களில் அவர்கள் வந்து விடுவார்கள்.
எங்கும் செல்லாமல் அறையினுள்ளேயே இருந்தேன்
ஜன்னல் மட்டும் திறந்திருந்தது.

இப்போது அந்தப் பறவை
பற பற பற
பறந்தது.

ஆம், அவர்கள் வந்து விட்டார்கள்.

ஆதிவிதையை அம்மரம்
பறவையின் அலகில் சொருகியிருந்த
அந்த கணத்தில் எழும்பி.. எழும்பி..

மாலை
ஜன்னலின் வெளியே தட்டான்கள் பறந்தன.

-----
நன்றி : கல்கி
ஓவியர் : அமீர் என்கிற அமிர்தம் சூர்யா2016 கல்கி தீபாவளி மலர் எனது கவிதை

No comments: