நேற்று இன்று நாளை


கொண்டாட்டத்தின் குளிர்மை
நிசப்த  அறைக்குள் மங்கிய வெளிச்சமாய் படிந்திருந்தது 
கவிழ்க்கப்பட்ட அந்த மதுக் கோப்பையின் மீது 
எறும்பு ஊர்ந்து செல்கிறது
அதனின் வயது சில ஆயிரம்
மென்துணியில் துடைத்து
கவிழ்த்தவனின் வயதும்
நடனமாடிய பெண்ணின் வயதும் சில நூறு
இன்று விபச்சாரத்துக்கு அழைத்து 
வரப்பட்ட சிறுமியின் வயது ஒரு சில நூறைத் தாண்டியிருந்தது 
கோப்பையில் ஊற்றப்பட்டிருந்த மதுவின் வயது 
பல்லூழி கடந்து..

திராட்சையை பறித்துக் கொண்டிருந்த விவசாயி
மனைவியின் பேறுகாலத்திற்காவது விடுப்பு கிடைக்குமாவென..

நன்றி : மலைகள்.காம்
The Grape Vine Painting by Donna Bingaman

No comments: