தூரிகை இறகு

வன்தனிமையில்
சிறு சப்தங்களிலும்
சுருங்கிவிடுகிறது
என் புலம் அனைத்தும்
முகவரியை தொலைத்துவிட்ட
தவிப்பு
நொடியின் நகர்வு
கால சர்ப்பமாகிவிடுகிறது
பிரபஞ்சத்தின் விளிம்பு
என் பாகங்களின் பிடிமானமற்று
தளும்புகிறது
வீசியெறிந்த உமிழ்நீர்
துளியொன்று
இவ்வளவு துர்நாற்றத்தை பரப்பியது
துண்டிக்கப்பட்ட வால்
துடித்துக்கொண்டேயிருந்தது
கையடக்கமாய்
அமர்ந்தது
பறவையின் இறகு
(உயிரோசை 07.09.2009 இதழில் வெளியானது நன்றி: உயிரோசை )

4 comments:

butterfly Surya said...

வாவ்..

அருமை என்ற ஒற்றை சொல் போதாது..

வேறு என்ன சொல்ல..? தெரியவில்லை.

வாழ்த்துகள்..

kannan said...

வண்ணத்துபூச்சியார்க்கு நன்றி

சி.கருணாகரசு said...

தோழரே, ஞானியைப்போல் இருக்கிறது விடயங்கள். கரு அருமை... ஆனால் கொஞ்சம் எளிமையாய் எழுதுங்கோ... எனக்கெல்லாம்...கொஞ்சம் குறைவாகத்தான் உள்ளது.

கண்ணன் said...

தோழர் சி.கருணாகரசுக்கு நன்றி
//எனக்கெல்லாம்...கொஞ்சம் குறைவாகத்தான் உள்ளது//
நான் உங்களை அப்படி எண்ணவில்லை