14.09.2009 ‘உயிரோசை' இணைய இதழில் எனது கவிதை:




















(நன்றி : உயிரோசை)

நீர் சுழி
திசை திருப்பினேன்
எனக்கான அமர்வை
திரைச் சீலை மாற்றினேன்
தரை விரிப்பு புதிதானது
அழைப்பு மணியில் குயில் கூவியது
உள்பேசி தொலைபேசி அலைபேசி
வர்ணம் வடிவம் மாறியது
வலத்தில் சிரிக்கும் புத்தர்
இடத்தில் வலக்கை பிள்ளையார்
நேர் எதிர் காசுக் கடவுள்
மேசை கண்ணாடியினுள்
இஷ்ட தெய்வங்கள் இன்னும்பிற
இடமும் வேலையும்
சேர்ந்தே மாற்றினேன் ஊழியர்களுக்கும்
எல்லாம் சரியானது என்றமர்ந்தேன்...

முன்பும் பின்பும்
இன்னொருவருக்காக
காத்திருந்தது
மெளனமாய் இருக்கை

7 comments:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நல்ல கவிதை. உயிரோசையில் வெளிவந்தமைக்கு வாழ்த்துகள்!

-ப்ரியமுடன்
சேரல்

பா.ராஜாராம் said...

அழகான கவிதை.வாழ்த்துக்கள் வேல்கண்ணா!

ஹேமா said...

வாழ்த்துக்கள் கண்ணன்.எந்தத் தெய்வம் வேலையைச் சரிவரச் செய்தது !

கனவுகளின் காதலன் said...

இருக்கை நிரம்பினால், அதனையும் மாற்றி விடுவாரே... :)

வாழ்த்துக்கள் நண்பரே.

வேல் கண்ணன் said...

சேரல் கருத்துக்கும் வாழ்த்திற்கும் நன்றி
*****************
பா.ராஜாராம் கருத்துக்கும் வாழ்த்திற்கும் நன்றி
********************
ஹேமா - விற்கு நன்றி.
//எந்தத் தெய்வம் வேலையைச் சரிவரச் செய்தது//
இது எல்லா மனிதர்களுக்கும் தெரிந்தால் போதும்
ஹேமா
*********************
நண்பர் கனவுகளின் காதலுனுக்கு நன்றி
//இருக்கை நிரம்பினால், அதனையும் மாற்றி விடுவாரே... :)
//
ஆம் , அதையும் செய்வார்கள் தான் நண்பரே

உயிரோடை said...

உயிரோசையில் க‌விதை வ‌ந்த‌மைக்கு வாழ்த்துக‌ள். க‌விதை அருமை.

வேல் கண்ணன் said...

உயிரோடைக்கு நன்றி