மே வானவில்


முற்றத்தில்  கேட்பாரற்று கிடந்த
வானவில்லை வீட்டினுள்
பதித்தேன் 


இருந்தவர்களும் வந்தவர்களும்
வீட்டிற்கு பலனில்லை என்றார்கள் 
வண்ணங்கள் தேய்ந்தது
 
கோடையும் வந்தது 
குழந்தைகளும் வந்தார்கள்;கைக்கொட்டினார்கள் 
கரணம் அடித்தார்கள்; கிறுகிறு வானம் சுற்றினார்கள்
கண்ணாமூச்சி ஆடினார்கள்; புரண்டார்கள்
மூழ்கினார்கள் 


கொள்ளாமல் பொங்கி வழிகிறது
வண்ணங்களில் ஒளி 

 
செல்லும்போது
எடுத்தே சென்றார்கள்
அனைத்தையும்


(05.06.2011 கல்கி இதழில் வெளியான எனது கவிதை )

நன்றி : கல்கி 

9 comments:

க.பாலாசி said...

ரொம்ப நல்லாருக்குங்க வேல்கண்ணன்.. வாழ்த்துக்களும்..

இராஜராஜேஸ்வரி said...

செல்லும்போது
எடுத்தே சென்றார்கள்
அனைத்தையும்
அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்.

santhanakrishnan said...

ஆம் கண்ணன்.
இன்னும் ஒரு வருடம்
காத்திருக்க வேண்டும்
அடுத்த வானவில்லுக்கு.

SANTHA said...

வண்ணங்களை இன்னும் நன்றாக பயன்படுத்தி இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். VIBGYOR பயன்படுத்தி இருக்கலாம்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

வேல்கண்ணனின் புதிய மொழி புதிய அனுபவம்.

தொலைபேசியில் தகவல் சொல்லியும் வாசிக்க இயலாமைக்கு வருத்தம் கண்ணன்.

திருநாவுக்கரசு பழனிசாமி said...

வண்ணங்கள் வழிந்தோடுகிறது தமிழாக !

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

கிருஷ்ணப்ரியா said...

ரொம்ப அழகான கவிதை வேல்ஸ்...

கோடையே கொஞ்சம் கொடுமை.
குழந்தைகள் வராத கோடைக்காலம் இன்னும் கொடுமை. அவர்கள் இருந்து விட்டாலோ கோடையும் குளிர்காலம் தான்.

rvelkannan said...

நன்றியும் அன்பும் பாலசி
நன்றியும் அன்பும் இராஜராஜேஸ்வரி
நன்றியும் அன்பும் மது
நன்றியும் அன்பும் சாந்தா
நன்றியும் அன்பும் சுந்தர் ஜி
நன்றியும் அன்பும் திரு.
நன்றியும் அன்பும் ரத்னவேல் ஐயா
நன்றியும் அன்பும் கிருஷ்ண பிரியா
உங்களின் வலைபூக்களுக்கு வந்து நாளாயிற்று
விரைவில வருகிறேன்