ஒரு வரி கூட எழுதவில்லை



ஒரு வரி கூட எழுதவில்லை
முதல் ஜாமம் கடந்து விட்டது
இரண்டாம் ஜாமம் கடந்து போகிறது
ஒரு வரி கூட எழுத முடியவில்லை

இள மஞ்சள் இளங்காற்று தொடரும் கண் அயர்ச்சி
பதற்றத்துடன் எழுதல் அல்லது எழுப்பபடுதல்

இயற்பியல் சித்தாந்தங்களின்
பக்கங்கள் வலுக்கட்டாயமாக
திருப்பப்படும் திணிக்கப்படும்

பற்றிக்கொண்ட வேகம்

வெப்பம் வெப்பக்காற்று
வெக்கை வெக்கை வெக்கை
தெறித்து விடும் கண்ணெரிச்சல்

நகுலன் ஒரு சமயம் எரிந்தது போல்
காண்பதெல்லாம் 

என்கையில் ஒரு கத்தி எதிரே பல
தளர்ந்த நடை நரம்பு தளர்ந்த மஞ்சள்
இருப்பினும்
தளராத நெரிசல் அதிகரித்த கவுச்சி

பாதி வேக்காட்டை முழு வேகத்துடன் முழுங்கி
சாயும் போது ........'ஒரு வரி கூட எழுதவில்லை
இன்று எழுதி விட வேண்டும்
ஒரு வரியாவது' 

நன்றி : வார்ப்பு 

13 comments:

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

அன்னிக்கே கேட்டிருந்தீங்க வேல்கண்ணன்.நானும் மறந்துவிட்டேன்.

ஒருநாளைக்கு நாலு ஜாமம்.

எழுதாமல் இருக்கும் அவஸ்தையை என்னென்பது?

வேக்காடுதான். தணியாத வேக்காடு.

நிலாமகள் said...

என்கையில் ஒரு கத்தி எதிரே பல//

எல்லாம் கடந்து தான் இயங்க வேண்டியிருக்கிறது.

ஒன்பதாம் மாத பிள்ளைத்தாய்ச்சி போல இறக்கி வைக்கத் தவிக்கும் எத்தனிப்பு கவிதை முழுதும்...

இன்றைய கவிதை said...

இது ஒரு அலாதியான தவிப்பு , பகிர நினைக்கும் மனது மிகவும் அருமையாக தங்கள் தவிப்பை பதித்திருக்கிறீர்கள்

நன்றி வேல்கண்ணண்

உயிரோடை said...

ரொம்ப‌ நாளாக‌ என‌க்கும் இதே எண்ண‌ம் தான்

அன்புடன் நான் said...

தோழரே... வணக்கம்.
நிலைக்கொள்ளாமையின்... சொல் வடிவம் நல்லாயிருக்கு....

கனவுகளின் காதலன் said...

அருமையான ஆக்கம் நண்பரே.

vasan said...

துர‌த்தினால் ஓடும் ப‌ட்டாம்பூச்சி,
சும்மாவிருந்தால் சுற்றிச் சுற்றி வ‌ரும்
எழுத்தைப் போல‌.

கமலேஷ் said...

என்ன நண்பரே..
வந்து வந்து பார்த்து ஏமாந்து போறேன்.
இன்னும் ஒரு வரிகூட எழுதலன்னே சொல்லிக்கிட்டு இருந்தா எப்படி.

rvelkannan said...

என்றும் நீங்கா நட்பிற்கு நன்றி
அசோக்
சுந்தர் ஜி
கௌரி பிரியா
நிலா மகள்
ஜே.கே
லாவண்யா
கருணாகரசு
கனவுகளின் காதலன்
வாசன்
கமலேஷ்
ஆகக் அனனவருக்கும் எனது அன்பு

மாலதி said...

அருமையான ஆக்கம் நண்பரே.

சத்ரியன் said...

இன்று எல்லாரும் இப்படித்தான் இருக்கிறோம் வேல்கண்ணன்.

எண்ணத்தோடு இயைந்து செயல்பட முடிவதில்லை.பிழைப்பதற்காக எதெதையோ செய்துக்கொண்டிருந்து விட்டு இயலாமையுடனே இறந்து போகிறோம்.

சத்ரியன் said...

இன்று எல்லாரும் இப்படித்தான் இருக்கிறோம் வேல்கண்ணன்.

எண்ணத்தோடு இயைந்து செயல்பட முடிவதில்லை.பிழைப்பதற்காக எதெதையோ செய்துக்கொண்டிருந்து விட்டு இயலாமையுடனே இறந்து போகிறோம்.

rvelkannan said...

Thanks to Malathi and Sathriyan