![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjnDMBkbLGI2LxMcAErmnnBAe6f45DxA1MdCWhnHGTmNKQYHhh_Tsc70l8WOa2E33iOxItxAyVr3PiiBcLKKiTIEMMLhWsYxlUTlW8cSyoDoeLZ2mziR18RYnO17kO6CgXwrvDekmkOHZA/s320/po-velkannanuyi.jpg)
இங்கிருந்து வரையறுக்கப்பட்ட
முள்வேலிகளுக்கு அப்பால்
மழையுறும் பெரும் திடல்
மின்னலின் வெளிச்சத்தில்
தனக்கான இருப்பை
உறுதி செய்யும்
துணி கூடாரம்
மிச்ச உயிரையும்
மாய்த்துகொள்ளக் காத்திருக்கிறது
ஊழிக்காற்றில்
இடியோசையில் அதிர்ந்து
வீறிடும் குழந்தையின்
அழுகுரல் கேட்டு
நகரும் பாம்பு
சட சட வென
முறியும் ஒலி
தூரத்தில் கேட்கிறது
செய்வதறியாது நிற்கின்றேன்
வேலிகளுக்கு இப்பால்
(நன்றி : உயிரோசை )
13 comments:
//இங்கிருந்து வரையறுக்கப்பட்ட...//
வேல்கண்ணன்,
இந்தியாவின் அயோக்கியத்தனத்தை வெளிச்சமிடும் இரட்டைச்சொல் வாக்கியம் , அருமை.
//முள்வேலிகளுக்கு அப்பால் ...//
நம்மையும் சேர்த்து ஆறு கோடி பேரின் கையாலாகாத்தனத்தை அம்பலப்படுத்தத் துவங்கும் வரிகள்.
நல்லா கவிதை வேல்கண்ணா..அடர்த்தியான மௌனம் சூழ்கிறது,கவிதை வாசித்து நிறையும் போது.இந்த மௌனம் புதுசான ஒரு அனுபவமாக இருந்தது.அருமையான கவிதை.வாழ்த்துக்கள்!
சட சட வென
முறியும் ஒலி
தூரத்தில் கேட்கிறது
செய்வதறியாது நிற்கின்றேன்
வேலிகளுக்கு இப்பால்//
செய்வதறியாது நிற்பது நீங்க மட்டுமல்ல தோழரே...
கவிதை அருமை.
uyirosaiyile vasiththen nanbare
:-(
வாங்க சத்ரியன், உங்களின் வருகையும்
தொடர்தலும் மிகவும் மகிழ்வு அளிக்கிறது.
உங்கள் கருத்துரைக்கும் நன்றி.
//கையாலாகாத்தனத்தை அம்பலப்படுத்தத் துவங்கும் வரிகள்//
துவக்க வரியிலேயே புரிந்து கொண்டதற்கு நன்றி
******************
அன்பு பா.ராவிற்கு நன்றி. அந்த மெளனம் தான்
என் நெஞ்சை அடைத்தது
பா.ரா.
********************
தோழர் சி. கருணாகரசு வாங்க
கருத்துக்கு நன்றி.
*******
வாங்க, மண்குதிரை. நன்றி
***********
வலியும், வேதனையும் இழைந்த வரிகள் நண்பரே. இதயம் கனக்கிறது. உங்கள் இறுதி வரிகள் என்னை துகிலுரிக்கிறது.
நண்பர் கனவுகளின் காதலனுக்கு - வருகைக்கு நன்றி. உங்களுக்கு
மட்டும் அல்ல நம்மை போன்ற
அனைவருக்கும் தான்.
வேல்கண்ணன், கவிதை அருமை!
நான் சொல்ல நினைத்ததை
'கருணா' அவர்கள் முன் மொழிந்து விட்டார்!
வளர்க உமது பணி!
இன்றைய கவிதை நண்பர்களுக்கு நன்றி
வலி உணர்த்தினீர்கள் கண்ணன்,
வலிமையான வரிகள்.
நன்றி சதிஷ்
முள்வேலிக்கு அப்பாலும் இப்பாலுமாய் அவதியோடு தமிழன்.புத்தனுக்குப் பாலபிஷேகம் செய்யும்சிங்களம்.பாம்புக்குப் பால் வார்க்கும் உலக அரசியல்.
ஆம், சரிதான் ஹேமா
Post a Comment