அண்ணன் அறிவுமதி பக்கங்களில்பகிர்ந்து கொண்டிருந்தார் நமக்கான
வலியை*
சான்று சொன்ன புகைப்படத்தை
கேள்வி கேட்டு கொண்டிருந்தாள்
மடியில் அமர்ந்த என்சிறுமி
பத்து பனிரண்டு படத்தில்
இயன்ற அளவு கைகளிலும்
கொள்ளாத அளவு மனதிலும்
கனங்களை கொண்டிருந்தார்கள்
"இவங்கள யாருப்பா ''
'நம்ம சொந்தகாரங்க '
"இவ்வளவு பேர் எங்கேயிருந்து வராங்க"
'அவங்க ஊர்லயிருந்து '
"திரும்பி எப்ப போவாங்க "
'......'
(*வலி - இலட்சியக்கவி அறிவுமதி - தமிழ் மண் வெளியிடு )