Showing posts with label 2015. Show all posts
Showing posts with label 2015. Show all posts
கருமேகங்கள் சூழும் மணற் துகள்
மென்குளிர் படர
கருமேக போர்வைக்குள்
நுழையத் தொடங்கியது அந்திப்பொழுது
வானத்தின் வெளிர்கீற்றும் தூறலும்
நம் இறுதிச் சந்திப்பை நினைவுப்படுத்தின.
அச்சந்திப்பில்
உனது புனிதப் பாடலால் தான்
என் பசி தாகம் தீர்ந்தது
அதனின் சொற்களால்
பிரபஞ்சத்தின் ஒரு மூலையில் தூக்கி எறியப்பட்டேன்.
அங்கிருந்தே என் பயணம் தொடங்கியது
பயணம் முடியும் தருணத்தில்
உன்னிடமிருந்து ஒளித் துளிகள்
வந்தடைந்தன
கற்களும் முட்களும் தந்த வலிகள்
நொடி கணத்தில் நினைவிற்கு வந்த போதும்
ஆற்றுமணற் துகளென நெகிழ்வாய்
அள்ளிச் சேர்த்துக்கொண்டேன்
தாகமும் பசியும் எடுக்க
மணற் துகளை உண்ணத் தொடங்குகிறேன்
தேவலாயத்திலிருந்து புனிதப் பாடல்
கேட்கிறது
அதீதத்தின் மேலுறைந்த வெண்மையின் சுவடு
எரிதணல் கற்றைகளை உமிழும் சூன்யம்
உன் மெல்லிசை
ஒரு தழுவல்
விரல் தீண்டல்
எதுவுமற்றுக் கிடக்கிறேன்
உன் கூர்விழியின் சுடரொளியை
காணக்கிடைக்கும்போது
சேமித்துக் கொள்ள முடிவதில்லை
விரல் கோர்க்கையில் கிடைக்கும் இதம் போலவே
கணப்பொழுதில் கண்டடைந்துவிட்டேன்
உன்னை
முதுவேனிற் காலத்தில் தாயென அள்ளி
கார்காலத்தை மலையெனக் கடந்து
பின்வந்த காலத்தில் இலையென கூம்பி உதிர்த்து
கடும்பனி காலத்தில் தோள் சாய்ந்து இறுக்கி
இளவேனிற்க்காலம் வரை தோழியென உடன் வருகிறாய்
மிகக் கொடிய சுயநலமியான நானோ
நிர்வாணத்தை தவிர்த்து
வேஷத்தை தொடர்கிறேன்
சீரற்ற உன் மூச்சில் அறிந்தேன்
வாழ்நாளில் நான் செய்த பிழை
அந்தி கதிரவனாய் உள்ளிழுத்துக் கொள்கிறேன்
மடி சாய்ந்தக் கணமே கேட்டேன்
எனக்கான கல்லறை செய்யப்படும் ஓசை
வெற்றாய் நிலத்தை ஆக்கிரமிக்கும்
எதையுமே வெறுக்கிறேன்
இதமான சூட்டுடன் பாயும் குருதியை
சற்று நேரத்தில்
உறிஞ்சிவிடுவாய்
எஞ்சிய உள்ளீடற்ற எலும்புகளை
இதோ இந்த ஆழிப்பேரலை
கொண்டுச் செல்லும்
நன்றி : கணையாழி
ஓவியம் : Man Ray
நன்றி : ஆறுமுகம் முருகேசன், நரன், ந.பெரியசாமி
மன்னவளே
கதவை திறந்தேன்
வாசலில் நீ
உள்ளிழுத்து தாழ் இட்டுக் கொள்கிறாய்
வாசலில் நீ
உள்ளிழுத்து தாழ் இட்டுக் கொள்கிறாய்
குறைந்த வெளிச்சம்
நிறைந்த இருள்
அறையின் நீள சதுரங்களை நிர்ணயக்கிறது
உன் முகஒளி
நிறைந்த இருள்
அறையின் நீள சதுரங்களை நிர்ணயக்கிறது
உன் முகஒளி
உன் தோள் சாய்ந்த போது சேயானேன்
நீ சாய்ந்த போது மலையானேன்
நீ சாய்ந்த போது மலையானேன்
உன் பார்வை தீண்டலில்
கோடைக்காலம் குளிர்க் காடானது
கான்கிரீட் நகரம் நந்தவனமானது
வயது மறந்து தாயின் கருவறைக்குள் இருந்தேன்
கோடைக்காலம் குளிர்க் காடானது
கான்கிரீட் நகரம் நந்தவனமானது
வயது மறந்து தாயின் கருவறைக்குள் இருந்தேன்
இந்த மாலை கொள்ளாமல்
தவழும் தென்றலை
நம்மிடையே நுழையாமல்
பின்னிக்கொண்டவளே
Subscribe to:
Posts (Atom)





