Showing posts with label சிக்கி முக்கி. Show all posts
Showing posts with label சிக்கி முக்கி. Show all posts
புலப்படா வெளிச்சம்
முகமறியா மனிதர்கள்
பெயர் தெரியாத ஊர்
கேட்பாரற்று கிடக்கிறது
உடல்.
வாசனையின் உணர்வோ
உணர்வின் காட்சிகளோ
ஏதுமற்று இயங்கும்
சுவாசம்.
இடையிடையே
வந்து போகும் வெளிச்சங்களின்
நிறம் எதுவெனப் புலப்படவில்லை.
கேட்டதையும் கிடைத்ததையும்
இனமறியவில்லை.
மனம் சோம்பிகிடக்கிறது
அறிவிக்கப்பட்ட
தோல்வியுற்ற கணத்தில்
ஆற்று மணலில் கால் பதிய
நடக்கத் தோன்றினும்
பேரமைதிக்கான களத்தில்
போராட சொல்கிறது காலம்.
பிப்ரவரி மாத சிக்கி முக்கி இணைய இதழில் வெளியான கவிதை
நன்றி : சிக்கி முக்கி
Subscribe to:
Posts (Atom)
