கதைசொல்லி சொன்ன கதைகளின் வழியே
ஏழு மலை
ஏழு கடல்
அடர் காடுகள் கடந்து
சிகரத்தின் உச்சியில் பிடறி சிலிர்த்தெழுந்த
வெள்ளை புரவியில் அமர்ந்திருந்தேன்.
ராஜகீரிடம் கனத்தது.
பரந்த நிலப்பரப்பை தாண்டி
எதிரியின் மூவர்ணக்கொடி
உயர பறப்பதை காணமுடிகிறது
இங்கிருந்து
உயர பறப்பதை காணமுடிகிறது
இங்கிருந்து
கடிவாளம் தளர்த்தி முன்னேறும் போது
எதிரியின் கொடி
எதிரியின் கொடி
தளர்வதையும் முன்னோக்கி
வருவதையும் காண்கிறேன்
எனதான படையுடன்
களம் அடைந்தேன்
இளைப்பாறிய புழுதியின் பின்
பெரும்திரளான படையுடன் எதிர்களத்தில்
நிற்கும் எதிராளிகளை உற்று நோக்குகிறேன்.
நிற்கும் எதிராளிகளை உற்று நோக்குகிறேன்.
நூலிழையும் மாறுபாடுகளின்றி நானே அங்கும்
என்னிலிருந்து வீசும் ஆயுதங்கள்
என்னையே கொன்று குவிக்கின்றன
எல்லா தேசத்திலும்.
எல்லா தேசத்திலும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நன்றி : சென்னை சங்கமம் 2011
நன்றி : உமா சக்தி
நன்றி : பொன். வாசுதேவன்
மற்றும் அனைத்து நண்பர்களுக்கும்
