அப்பொழுது நான் மலையுடன் பேசினேன்
இறுதியாக நீ மலையை கடந்ததால்
அப்பொழுது நான் கடலுடன் பேசினேன்
இறுதியாக நீ கடலில் கலந்ததால்
அப்பொழுது நான் மரத்துடன் பேசினேன்
இறுதியாக நீ பழங்களில் பசியாறியதால்
எப்பொழுதோ நீ பகிர்ந்த வெம்மையினால்
தனித்திருக்கிறேன்
இறுதியாக நான் ஒரே ஒரு சுடருடன்
நன்றி : இலக்கியச் சுற்றம்