Showing posts with label விமர்சன கவிதை. Show all posts
Showing posts with label விமர்சன கவிதை. Show all posts

அவரைப் பற்றி

சில
வாரங்களுக்கு முன்
அவர் வந்திருந்தார்
கனமான புத்தகத்துடன்


என்
அறையில் சிதறிக்கிடந்த
புத்தங்களில் மூன்றை
தேர்ந்தெடுத்தார்.


'படித்து விட்டீர்களா'
பதில் எதிர்பாராமல்
பேசவும் தொடங்கிவிட்டார்
கொண்டு வந்த
புத்தகத்தை பற்றி


'கண்டிப்பாக படித்துவிடுங்கள்'
விடைபெறும் போதும்


சில
நாட்கள் சென்றபின்
தேநீர் நிலையத்தில் சந்தித்தோம்
'படித்து விட்டீர்களா'
இப்பொழுதும்
பதில் எதிர்பார்க்கவில்லை
பேச தொடங்கிவிட்டார்
கொடுத்த புத்தகத்தை பற்றி


பிரிகையில்
'நாளை மறுநாள் வரேன், பேசுவோம்'
என்னவென்று
உங்களுக்கும் எனக்கும்
தெரிந்தது தானே

நன்றி :  தமிழ்த்தோட்டம்

இருந்து விட்டு போகட்டும்


உனது நண்பர்கள் ஆறுபேரை
அழைத்து வந்தாய்
அறிமுகமும் செய்தாய்
அவரவர் பெயர் ஊர்
புனைபெயர்
மற்றும்
நீண்ட நட்பு
நெடுநாள் நட்பு
நெருங்கிய நட்பு
பால்ய நட்பு
பிரித்தும் சொன்னாய்
'என்ன செய்கிறார்கள்'
"கவிதை செய்கிறார்கள்"
..ஆக மொத்தம் உன்னுடன்
சேர்ந்து ஏழு